ராஜீவ் கொலை வழக்கில் கே.பியை விசாரிக்க இன்டர்போலின் உதவியை நாடியுள்ள இந்தியா

KPமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்த இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் இதற்காக சர்வதேச பொலிஸின் உதவியை நாடியுள்ளது.

இந்த விசாரணையில் ஒத்துழைக்குமாறு இலங்கையை இணங்கச் செய்வதற்காகவும் சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீடிக்கின்றது.

இலங்கையிடமிருந்து சகல தகவல்களையும் பெற்ற பின்னர் இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.

இலங்கையை இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி பல கடிதங்களை இலங்கைக்கு அனுப்பியிருந்ததாகவும், எனினும் தமது வேண்டுகோளை துரிதப்படுத்துவதற்காக சர்வதே பொலிஸாரின் உதவியை நாடியதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: