நாங்கள் இந்தியர்கள் அல்ல , நாங்கள் தமிழர்கள் , இதுதான் எங்களுடைய காலம் காலமான தொன்மையான உண்மை அடையாளம் என்று மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் தெரிவித்தார்.
இந்தியர் என்றால் என்ன ? அதன் கலாச்சாரமும் பண்பாடும் என்ன ? அதன் தாய்மொழி என்ன ? அதன் வழிபாடுகள் என்ன ? என்று கேள்விகனைகளை நாமே கேட்டாலே , ”இந்தியர்” என்பது அர்த்தமற்றது என தெளிவாக புரிய வரும் என்றார் அவர்.
வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் வெள்ளைக்காரன் ஒருங்கிணைந்த மாநிலங்களை ஆட்சி செய்து அதை இந்தியா என்று பெயரிட்டதும் அவனே என்பது உலக வரலாறு.
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றப்பட்ட மூத்த இனம் தமிழர் இனம். தமிழரின் முத்த 10,000 ஆண்டுகளுக்கு பழமை இலக்கிய இலக்கண நூலில் முதல் பாயிரத்திலே ”தமிழ்” என்று குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் என்பது விளங்கி கொள்ளலாம் என்றார் கலைமுகிலன்.
இதே எல்லாம் நாம் தமிழர் என்பதற்க்கான சான்றுகள், வரலாறுகள். சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தவரான புரிதலால் நாம் இந்தியர் என்று அடையாளபடுத்த பட்டு வருகிறோம். ஆனால் இப்போது இளைய தலைமுறையினர்கள் நம் இனத்தின் அடையாளத்தை தெளிவாக புரிந்து வருகிறார்கள்.
மேலும் , தமிழர் என்ற இனம் வெறும் நேற்று தோன்றிய இனம் அல்ல , அது ஒரு தேசிய இனம் சுமார் 75 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம். கணக்கெடுப்பில் பார்த்தால் 10 வது பெரிய இனமாக இருக்க வேண்டிய அங்கிகாரம் கொண்டவை ஆனால் அதற்கு தனி நாடு இல்லாமல் இருப்பதால் அந்த 10 வது என்ற அங்கிகாரம் இல்லாமல் இருக்கிறோம்.
தமிழர்க்கென்று பண்பாடு , கலை கலாச்சாரம் , மொழி , விழாக்கள் , வழிபாடுகள் , பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தனி குணமும் உண்டு என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைபாளரான கலைமுகிலன் வலியுறுத்தினார்.
மேலும் சொல்ல போனால் நம்முடைய உறவுகளாக இருக்கும் தெலுங்கர்கர்களும் கன்னடர்களும் ஏறக்குறைய 1,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே , அது போலே மலையாளி உறவுகளும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே.
இப்படி இதுபோன்று தமிழர் இனத்திலிருந்து பிரிந்து இன்று சிறு சிறு இனமாக இருக்கும் பல இனங்களின் மொழியுக்கு தாய்மொழி தமிழ் மொழி ஆகும். ஆகையினால் இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு நாம் தமிழர் இயக்கம் ஆவணங்களை தயார்படுத்தி வழங்க உள்ளது.
மலேசியா தமிழர்களும் அவர் அவர் குழந்தைகளின் பிறப்பு பத்திரத்தில் ”தமிழர்” அல்லது ”தமிழ்” போடுமாறு கேட்டு கொண்டது. பிறப்பு பத்திரத்தில் தமிழ் என்று எழுதும் வசதி பல ஆண்டுகளாகவே உள்ளது. இருப்பினும் இந்த கோரிக்கை தமிழர் என்ற இனத்திற்கு அங்கிகாரம் வேண்டி கொடுக்கபட்வுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியர் என்று சொன்னால் ”தமிழர்” , ‘மலையாளி ‘, ‘தெலுங்கர்’ ஒன்று படுத்துவற்றக்கான ஒற்றுமைகள் ஏதும் இல்லை ,ஆனால் தமிழ் என்று சொன்னால் இந்த மூன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையை கொண்டு வரலாம்.
முதலாவது மூன்று இனங்களும் தமிழ் மொழியை பயன்படுத்துகிறார்கள் மற்றுமொன்று இந்த சிறு சிறு இனங்கள் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து போனவை என்பதால், தமிழர் தமிழ் மொழி குடும்பம் என்று ஒன்று படுத்தலாம் என்றார் அவர்.
இது தொடர்பாக ஆழமான செய்திகள் தெரிந்து கொள்ளவோ அல்லது அரசுக்கு விண்ணப்பம் கொடுபதற்க்கு ஆதரவு வழங்கவோ 0135227795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்அஞ்சல்: [email protected]
உங்கள் பூச்சாண்டிகளை உங்கள் பேரன் பேத்திகளிடம் காட்டுங்கள் தேனீ .. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடாது..நான் சுய இந்தியனாகவே இருந்துவிட்டு போகிறேன்..இதில் உமக்கென்ன நஷ்டம் ?? நீங்கள் என்ன உலகை புதுபிக்க புறப்பட்ட தேவ தூதனா ? முதலில் உங்கள் வீட்டில் உமது கருத்துக்கு மதிப்பு உண்டா ?
எங்கள் வீட்டில் எமது கருத்துக்கு மதிப்பு உண்டு. மனைவி பிள்ளைகள் அனைவருமே யாம் காட்டிய வழியில், நெறியில் நிற்கின்றோம். அதில் என்ன சந்தேகம் உமக்கு?.
இங்கே நாம் தமிழர் என்று எழுதினாலும், எங்கள் குடும்பத்தில் தெலுங்கு, மலையாளிகள், கன்னடர், யாழ்பானத்தவர் உறவு உண்டு. இதை வேற்றுமையில் ஒற்றுமை என்றால் ஏற்றுக் கொள்வேன். ஆனால் இதுவே வேற்றுமையில் வேற்றுமை என்று ஆனால் எதிர்த்து நிற்பேன்.
நான் உலகைப் புதுபிக்கப் புறப்பட்ட தேவ தூதனா என்றீர். அவ்வளவு பெரிய பட்டம் பதவி எல்லாம் எதிர்பார்த்து வந்தவன் அல்ல நான். RSS போல விவேகமாக செயல்பட துணிந்தேன். அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவே. வெற்றி நிச்சயம்.
அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம். என்னை பொறுத்த வரையில் தமிழ் குட்டையில் தேங்கி கிடக்கும் மலை நீர் அல்லே. அது கடல். தமிழை எவன் ஒருவன் நேசிக்கிறானோ அவன் தமிழன் ஆவான். மற்ற மதங்கள் எப்படி இந்த உலகில் பலம் கொண்டுஉள்ளது. காரணம் அவர்கள் அதை பரப்புகிறார்கள் மற்றவர்களுக்கு அவர்கள் மதத்தில் உள்ள நல்லெ விசயங்களை எடுத்து சொல்லி அவர்கள் மதத்தில் நுழைகிறார்கள். ஏன் இப்போது நம் இந்த இணையத்தளத்தில் தமிழில் எழுதுகிறோம் என்ன்றால் அது மட்ட்ரவர்களும் தமிழை அறிந்துகொள்ள ஒரு வழிதான்.நம் நாட்டில் இந்தியர்களை உடைக்கும் சதி என்ன்றே எனக்கு தோன்றுகிறது. நாம் தமிழர்கள் அதை யாராலும் அழிக்க முடியாது. ஊர் ரெண்டுபட்டால் குதாடிக்கு கொண்டாட்டம் போல இந்தியர்களை உடைத்து அதில் குளிர்காய நெனைக்கும் மனங்கட்ட அரசியல்வாதிக்கு இடம் கொடுக்க கூடாது. தமிழை முதலில் தமிழர்களுக்கு போதித்து தெளிவு பெற செய்வோம். தமிழை வளர்ப்போம் வாழவைப்போம்.
வெண்ணை இந்துதர்மரே! 1931 ஆண்டு மலேசியா மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொது மலாயர், ஜாவா,மீனாங்,பஞ்சர்,ஓரங் ஹுலு, இன்னும் சேர்த்து 6 பிரிவுகளாக இருந்த புமிபுற்ற மக்கள் பிற்காலத்தில் தங்கள் நலன் கருதி இந்த 6 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து பெரும்பான்மையாக இருந்த மலாய்க்காரர்கள் என்று ஒரு குடையின் கிழ் வந்தனர்! இன்று அவர்கள் அனைவரும் ஓட்ருமையாய் நன்றாக உள்ளனரே! இதற்க்கு சான்றாக இன்றும் மலேசியா மக்கள் தொகை கணக்கெடுப்பில் மலாயர் என்ற பிரிவுக்கு கீழ் எத்தனை உட்பிரிவு உள்ளது என்று பார்க்கவும்! நாமும் என் அப்படி செய்யக்கூடாது? இங்கு இந்தியர் என்ற ஒரு இனமே கிடையாத போது நாம் ஏன் நம்மை இந்தியர் என்று சொல்லவேண்டும்? தமிழர் என்று சொல்லிவிட்டு போகலாமே!
நம் மலைநாட்டில் சாதிக்கு ஒரு சங்கம் இருக்கும் போது, வெட்கப் படாதப் இவர்கள், ஏன்? பிறப்பு ஆவணதில் தமிழ் என்று இருக்க வேண்டும் என்று கேட்கும் போது. இவர்கள் கோபிப்பது ஏன்? என் இனம் தமிழினம், என் மொழி தமிழ். தமிழன்டா.
மயிலாடுதுறை எல்லான் – இந்நாட்டில் எத்தனை ஜாதி சங்கங்கள் உள்ளன என வெளியிட்டால் எத்தனை மூடர்கள் அதில் உறுப்பினர்களாய் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம் >>>
inthuDharman, நமக்கு சாதியின் சங்கமும் அதில் உள்ள மூடர்களின் எண்ணிக்கையும் தேவையில்லை. சமுகத்தில் சமுக நல விரும்பியே தேவை. ஒரு யூதன் உலகதில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும், அவன் யுதனாகவே இருப்பான்.அதேப்போல ஒரு சீனன் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் எந்த ஒரு மதத்தில் இருந்தாலும், ஒற்றூமையாக இருந்து சீனப்பெருநாளை சீனனாக கொண்டாடுவான்.ஆக, நம் தமிழ் சமுதாயத்திற்கு, யூதரின் தன்மான உணர்வும் சீனனின் ஒற்றூமையும் மிக தேவை.
மயிலாடுதுறை அன்பரே – நழுவ பார்க்கவேண்டாம்> வீட்டுக்கு வீடு ஜாதி சங்கங்கள் தமிழர்கள் வைத்துள்ளார்கள் என சகட்டு மேனிக்கு நம் இனத்தையே துப்பிவிட்டு > அதுவும் இல்லை எதுவும் இல்லை என நழுவினால் என்ன பொருள்?? வீணாக நம்மிடையே அவதூறு பேசுதல் நன்றா ??
கோலாலம்பூர், கிள்ளான், கேமரன் மலை, சிரம்பான், பினாங்கு சுற்றுவட்டாரத்தில் விசாரித்து பாருங்கள் எத்துனை சாதி சங்கங்கள் இருக்கு என்று தெரியும்.
அவதூறு பேசுதல் என்பது வேறு. தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்த முனைவது வேறு. நான் இரண்டாம் வகை. இனம் என்னும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் நம்மில் இருக்கும் தவறுகளைச் சரி செய்ய எண்ணி உண்மை நிலையை உள்ளதை உள்ளபடி உரைக்கும்படியாக சொல்வதில் எண்ண குறை கண்டீர் அன்பரே…. இதில் என்ன நழுவ இருக்கிறது. எது மாறினாலும், பிறப்பால் வந்த அடையாலமான “இனம்” மாறாது. மாறப்போவதுமில்லை.
சாதி சங்கங்கள் ஆயிரம் இருக்கட்டுமே.
அதனால் யாருக்கு என்ன நஷ்டம்.
சாதியை கட்டிக்கிட்டு அழுறவன் அழுவட்டுமே.
நீங்கள் ஜாதி இல்லை என்றல் இல்லாமல் போயிடுமா.
ஜாதி இல்லை இல்லை என்று ஜாதியை வளர்ப்பதே நிங்கள்தான். அவனவன் தொழிலை வைத்து ஜாதி உருவானதற்கு யார் காரணம்?
ஜாதியை பற்றி விமர்சனம் செய்யாமல் அவனவன் வேலையை பாருங்கள்.
யானை அறிவுடையது என்பார் மிருகவியலார். இது படிக்காத யானையைச் சொன்னது. ஆனால் படித்த யானைகள் என்னவோ புத்தி கெட்ட முட்டள்களாக சாதியத்தை தூபம் போட்டு வளர்பதைப் பார்த்தால் இவர்களை விட படிக்காத யானை எவ்வளவோ மேல்!.
முதலில் இந்தியர்கள் என்ற அடையாளத்தில் இருந்து தமிழர், தெலுகர், மலையாளி, என்று பிரித்து விடுவீர்கள். பின், குண்டர், தேவர் , மறவர் என்ன பிரித்து விடுவீர், பிறகு சிகப்பு, கருப்பு என்ன பிரிப்பீர் ……தொடரும்
இந்தச் சாதி என்பதே நமக்குத் தெரிய 2- ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறைவில்லாத காலந்தொட்டு இருந்து வருகின்ற இழிவுச்சின்னம் ஆகும். அதை இன்றைக்குத்தான் இவ்வளவு வேகமாக ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறோம் என்றால் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. காரணம் மானம் உடையவனுக்குத்தான் மனிதன் என்று பெயர். மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கின்றோம்.
இந்த இரண்டும் உள்ளவர்களுக்கு – இன்றைக்கு இந்த வேலையைச் செய்யும் நிலைமை ஏற்பட்டதென்றால், இதுவரை இந்தச் சமூதாயத்திற்கு மான உணர்ச்சியோ, அறிவு உணர்ச்சியோ இல்லை என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது என்று தான் நான் கருதுகிறேன்.
– பெரியார்
(‘விடுதலை’, 07.10.1961)
எனவே மானத்தோடு என் தமிழினம் வாழ, மானமுள்ளத் தமிழினத்தில் வாழ இந்தத் துப்புரவுப் பணி பெரியார் காலம் தொட்டு இன்று வரை சாதி ஒழியும் வரை செய்ய வேண்டிய அவசிய வேலையாகும். இதைச் செய்யத் துப்பில்லாதவர்கள், தம்முடையக் கையாலாகாதத் தனத்தை மறைக்க எத்தனிக்கும் வேலையாகும்.
அறிவுச் சுடர் திலிப் அவர்களே, மேலும், எனக்கு ஒரு சந்தேகம். அடிப்படையில் தமிழன் என்ற இனம் மட்டும் தான் இருந்தது. பிற மொழி நம் செம்மொழியில் (தமிழ்) கலந்து பின்பே பிரிந்த நிலை தான் இந்த கன்னடம், தெலுங்கு, மலையாளம்
முதலில் மேற்காணும் அந்த 3 மொழிகளின் உருவாக்கம் பற்றிய தெளிவு வேண்டும். இது பிரிவினைக்காக சொல்லப்படவில்லை. பிரிந்த கதையை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் + 80% சமசுகிருதம் = இன்றைய கன்னடம்
தமிழ் + 60% சமசுகிருதம் = இன்றைய தெலுங்கு
தமிழ் + 40% சமசுகிருதம் = இன்றைய மலையாளம் (எதோ கொஞ்சமாவது விளங்குகிறது..)
தமிழ் + 20% பலவித வேற்று மொழிகள் (சமசுகிருதம் உட்பட) = இன்றையத் தமிழ்
இதை ஏன் சொல்கிறேன் என்றால், மொழியின் அடிப்படையிலேயே தான் இனம் தீர்மானிக்கப்படுகிறது என்பதன் பொருள் விளக்கவே. தமிழ் மொழியில் இருந்து பிரிந்து வந்த பிள்ளை மொழிகளே இந்த கன்னடம் தெலுங்கு மலையாளம். இது பிரிவினையல்ல. அடிப்படை. வரலாற்று உண்மை. இது இப்படியிருக்க, இந்தியன் என்ற ஒரு அடையாளம் வேறு நம் தமிழினத்தினுள் நுழைகிறது. இந்தியன் என்றால் என்னங்க???
அமேரிக்க குடிமகனை (அதாவது அமேரிக்காவிலே பிறந்த ஒருவரை) அமேரிக்கன் என்றுதான் சொல்லப்படும்.
அதேபோல், கொரியாவில் பிறந்தவரை கொரியன் என்பர்
சிங்கப்பூரிலே பிறந்தவரை சிங்கபோரியன் என்பர்.
இந்தோனேசியாவிலே பிறந்தவரை இந்தோனேசியன் என்றுதான் சொல்வர், சொல்லப்பட வேண்டும். இது பிறப்பால் வந்த குடியுரிமைச் சொல்லாகும். அப்படியெனில், இந்திய நாட்டிலே பிறந்தோருக்குத்தானே இந்த “இந்தியன்’ என்னும் சொல் அடையாளமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்… இதுதானே LOGIC…???
இன்னொரு வகையில், பிரஞ்சு மொழி தாய் மொழியாகக் கொண்டவர், பேசுபவர், பிரஞ்சுக்காரர்.
சீன மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர், பேசுபவர், சீனர்.
ரஷ்ய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர், பேசுபவர், ரஷ்யர்.
இப்படி தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான், எங்கு சென்றாலும் மாறாத இனம் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.
அப்படியிருக்க, மலேசியாவில் பிறந்து தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இனம் மலேசியத் தமிழ் இனம் என்றுதானே சொல்லப்பட வேண்டும். “இந்தியன்” என்ற அடையாளமோ, தாய் மொழியிலிருந்து உருவான மற்றப் பிள்ளை மொழி அடிப்படையில் கூறப்படும் அடையாளமோ, வந்தேறிகளின் அறிவுக்கொவ்வா பிரிவினையின் அடிப்படையில் சான்றப்படும் சாதியப் பிரிவினைகள் அடையாளமோ எந்த வகையில் இருப்பது சரி..???
ஒரு கொசுறுத் தகவல்… இந்திய நாட்டிற்கு அவங்களே பெயர் வைத்துக்கொள்ல வில்லை.. ஆள வந்தவர்கள் தங்கள் மொழியில் ஓசை அடிப்படையில் வைத்த பெயர் தான். அப்படியிருக்க… நமக்கு எங்கங்க அது பொருந்தும்..??
திலிப் அண்ணே, இப்படியெல்லாம் ஆதாரமே இல்லாமல் நம்ம ஆளுங்க பேசுவாங்கன்னு தெரிஞ்சே தான் நம்ம பாட்டன் “கனியன் பூங்குன்றன்” பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தான், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று…
இதுவாவது விளங்குமா இல்லை இதுக்கும் விளக்கம் தேவையா…???
“மானம் உடையவனுக்குத்தான் மனிதன் என்று பெயர். மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கின்றோம்”. முத்தான முத்துக்கள். தற்கால தமிழருக்கு வேண்டிய பொய்யா மொழி.
வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா
அவர் சொல்லுறது சரிதா ஏனெனில் நீங்க இந்தியர் இல்லை மலேசியர்கள்
நாங்கள் மலேசியர் இல்லை தமிழர் என்று சொல்லி இருக்கலாம்
நாம் தமிழ் கட்சியின் கொள்கை என்ன? சீமானும் சராசரி அரசியலவாதியே
தமிழர் என்றுமே மென்மையானவர்கள். அன்புக்கு எளிதில் உருகி விடுவார்கள். அதுதானே தமிழர் சமயத்தின் பண்பும். இத்தகைய தமிழரின் ஏமாளித்தனைத்தான், பிறர் வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறி அடி வேரிலேயே விஷத்தை ஊற்றி வேர் அறுத்தனர் அந்த இந்தியாவிலும் இந்த மலேசியாவிலும். வாழ்க வேற்றுமையில் ஒற்றுமை!.
திரு கார்திக் அவர்களே, நீங்கள் காங்கிரசு சிதம்பரதின் மகனா? அல்லது மஞ்சள் துண்டுக்காரரின் மருமகனா? உலகத்தில் எந்த ஒரு மூலையில் பிறந்தாலும், தமிழனாக வாழ்பவன், தமிழை நேசிப்பவனுக்கு நாம் தமிழர் உணர்வே நாம் தமிழர் கொள்கை. சீமான் சராசரி அரசியல்வாதியாக இருக்கட்டும் ஆனால் சிதம்பரத்தைப் போல் கருணாநீதியை போல் சீமான் ஒன்றும் இனத் துரோகியல்ல.அது என்ன, வேற்றூமையில் ஒற்றூமை? தண்ணீர்க்காக தமிழ் நாடு ஏன் கர்னாடகா மற்றும் கேரளா என்கிற இரு மாநிலங்களிடமும் போராட வேண்டும்? இது தான் வேற்றூமையில் ஒற்றூமையா?
நேற்றைய மலேசிய தமிழ் பத்திரிகையில் திராவிட கழகத்தாரின் கூட்ட நிகழ்வைப் பற்றி ஒரு செய்தி படித்தேன். அக்கழகத்தின் கூட்ட ஆரம்பத்தில் ‘கடவுள் வாழ்த்து’ பாடியதால் ஒரு நபர் எழுந்து வெளியே சென்று விட்டு கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் மீண்டும் வந்து அமர்ந்தாரம். அத்தோடு நின்றிருந்தால் பராவயில்லை. தலைவரோ ஒரு படி மேல் போய் தமிழர் தங்கள் பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடாமல் தமிழ் வாழ்த்து மட்டும் பாட வேண்டும் என்ற ஒரு கருத்தையும் முன் வைத்தார். கழகத்தின் தலைவர் அவர்களுக்கு, திராவிட கழகத்தாருக்கு முன்னோடியாக விளங்கிய பெரியார், ஆரியரின் வைதீக மதமும் அதன் பண்பாட்டையுமே எதிர்த்தார். தமிழருக்கு என்று தனித்தொரு சமயமும், வைதீக மதத்திற்கும் அதன் பண்பாட்டிற்கும் வேறான தத்துவத்தையும், பண்பாட்டையும் கொண்டு தமிழர் சமயம் உள்ளதை அவர் தங்களுக்கு உணர்த்தவில்லை. நீங்களும் இன்று வரை உணரவில்லை. காரணம், வைதீக மதமும் அதன் பண்பாடும் தமிழரின் சமயத்தில் கலந்து தமிழரின் சமய நம்பிக்கை ஒரு மயக்கத்தில் இருந்ததினால் இவ்விடரண்டையும் பிரித்து அறிந்துக் கொள்ள தமிழ் நாட்டில் அன்று வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இன்றும் பெரும்பாலும் அப்படித்தான் அங்கு உள்ளது. மேலும் சமயம் என்ற வார்த்தையில் இருந்து கழகத்தார் தங்களைத் தாமே இருட்டடிப்பு செய்து கொண்டீர். ஆனால் மலேசியாவில் தமிழரின் சமயமாகிய சைவ சமயம் வைதீக மதத்தில் இருந்தும், அதன் பண்பாட்டில் இருந்தும் தனித்து நின்று மலேசிய சைவ சமய பேரவையின் தலைமையில் செயல்படுகின்றது. அதனால் தமிழரின் பொது நிகழ்வுகளில் திருமுறை பாடி நிகழ்வைத் தொடங்குவதை முறையன்று என்று சொல்வதை திராவிட கழகத்தார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நேற்றைய மலேசிய தமிழ் பத்திரிகையில் திராவிட கழகத்தாரின் கூட்ட நிகழ்வைப் பற்றி ஒரு செய்தி படித்தேன். அக்கழகத்தின் கூட்ட ஆரம்பத்தில் ‘கடவுள் வாழ்த்து’ பாடியதால் ஒரு நபர் எழுந்து வெளியே சென்று விட்டு கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் மீண்டும் வந்து அமர்ந்தாரம். அத்தோடு நின்றிருந்தால் பராவயில்லை. தலைவரோ ஒரு படி மேல் போய் தமிழர் தங்கள் பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடாமல் தமிழ் வாழ்த்து மட்டும் பாட வேண்டும் என்ற ஒரு கருத்தையும் முன் வைத்தார்!
வெங்காய திராவிடமே உங்கள் பகுத் அச்சா கருத்துக்கள்
தமிழரிடத்தில் மட்டுமே வேகவைக்க முடிகிறது !
ஏன் பாபா பிஸ்னெஸ் என்றுமில்லாதவாறு சந்துக்கு சந்து முளைக்குதே குருஜிகள் சமாயம் தமிலரல்லாதவர்களால் நாளுக்குநாள் வியாபாரநோக்கோடு பெருகுகிறதே இதற்கேல்லாம் வெங்காய பகுத் அச்சா தமிலரிமட்டும் வேலைசெய்யும் !!
அதுமட்டுமா இப்பெல்லாம் அதிகமான குடுகுடுப்பைகள் புற்றிசல்போல் வந்தவண்ணம் உள்ளது … அரைகுறை தமிழ் பேசி பல ஏமாந்த ஷோனகிரிகளிடம் தங்கநகைகளையும் சூரையாடியுல்லார்கள் … நாம் இந்த வகுத் அச்சா மக்களுக்கு சொல்வதெல்லாம் இந்தமாதிரி விசயத்தில் தங்கள் வெங்காய பகுத் அச்சா கம்பனி வேலைசெய்தால் நாங்களும் துணை நிப்போம் ..அதை விட்டுவிட்டு தமிலரைதான் நோன்டுவோம் என்றால் வெங்காயம் உரிதேறியபடும். மீண்டும் மீண்டும் எம்மக்களுக்கு நாம் சொல்வது திராவிடம் என்பது தமிளரல்லாதவர்களின் பதுங்கு குழி … இன்றைய தமிழக அரசியல் திராவிடம் பள்ளிளிகிறது ! திராவிடர் நெப்போலியன் மதகட்சிதாவியுள்ளார் .. இன்னும் பல திராவிட நாடகங்களை நாம் காணலாம் .. அண்மையில் வைகோ (கோபால்சாமி நாய்டு )அதிமு, தி மு கா இரண்டுபேரும் தங்களுக்குள் முரண்பாட்டை தவிர்த்து தமிழ்தேசியம் பேசும் பொது எதிரிய தந்தைபெரியார் மண்ணிலிருந்து அகற்றவேண்டுமாம் !!
வெங்காய ராமசாமியே நானொரு கன்னட தெலுங்கர் என்று சொல்லியும் இந்த கொபால்சாமினைடு பெரியார் மண்ணாமில்ல!
எல்லாம் எங்கநேரம்
அடகடவுளே!!!! ஒருத்தன் நல்லதுக்கு போராடும்பொழுது எதிரிகளை எதிர்த்து போராடுவதுதான் வழக்கம் .. ஆனால் நம் இனத்தில் மட்டும்தான் எதிரிகளோடு சேர்த்து நம்மினத்தின் சில “நண்டுகளையும்” எதிர்த்து போராட வேண்டி இருக்கிறது.. அடுத்தவன் அதே செஞ்சான், இவன் இதே செஞ்சான் , இது குற்றம் அது குற்றம் ன்னு சொல்லி சொல்லிதான் ஒண்ணுமே இல்லாத வெறும்பயலா இருக்கோம்.. சுயமரியாதையை தொலைத்து, அடையாளத்தை இழந்து செயலிழந்து கிடக்கிறோம் ..
தன்மான தமிழன் – உங்களின் சில விஷயங்கள் ஏற்று கொள்ளும் வகையில் உள்ளன..ஆனால் ,இறையாண்மை கொண்ட மலேசியாவில் வசித்து “கடவுள் மறுப்பை ” தாங்கி பிடித்து வரும் திராவிட இயக்கம் கடவுள் வாழ்த்தை விரும்புமா ??என்ன நடக்க போகிறது என்று முன்னேட்பாட்டை கூட கவனிக்காமல் அதன் தானை தலைவரும் -அதன் நிர்வாகமும் தூக்கத்தில் இருந்தார்களோ ??????
கடவுளை இருக்கிறது என்று சொல்பவனுக்கு என்ன உரிமை உள்ளதோ அவ்வாறே கடவுள் இல்லை என்று மறுப்பவனுக்கும் முழு உரிமை உள்ளது. எவனாக, எந்தக் கொள்கை உள்ளவனாக இருந்தாலும் தணக்கு முதலில் உண்மையாக இருக்கிறானா என்பதுதான் முக்கியம். தனக்கே உண்மையாகாக இருக்க முடியாதவன் கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் யாருக்கும் எந்த பயனுமில்லை. அவன் ஒரு வேடதாரியாகவும் போலியாகவும்தான் இருப்பான். தன்னைப் பெரிய அறிவாளியெனக் காட்டிக்கொள்ள கடவுள்மறுப்பையும், தன்னைப் பெரிய பரிசுத்தவனாகப் படம்காட்ட கடவுள் நம்பிக்கையாளனாகவும் காட்டிக்கொள்வது உலகத்தை ஏய்பவர்களின் செயல். நிறைகுடங்கள் எப்போதுமே தளும்புவதில்லை. காலி டப்பாக்கள்தான் அதிகமாக ஓசையெழுப்பி ஆர்பரிக்கும்.
சைமன் ( சீமான்) ; வை கோபால்சாமி நாயக்கர் , பல.நெடுமாறன் ,வீரமணி நாயுடு ,எல்லாமே தமிழ் என்ற பெயரால் சொந்த நாட்டுக்காக அதன் தமிழ் மக்களுக்காக பேசாமல் தினமும் ஈழம் பற்றியும் ;, அங்கு வாழும் மக்களைப்பற்றியும் மட்டுமே பேசி வருகின்றனர்.. பிழைக்க வைப்பது இந்தியா >>கவனம் பூராவும் அந்நிய மக்கள் மீது ??ஏன் ? அடுத்த தேர்தலில் அங்கேபோய் பிரசாரம் செய்து தொலைக்க வேண்டியது தானே ? அதுக்கு மட்டும் தமிழ்நாட்டு மக்கள் வேணுமோ ??
துரை அவர்களே இழிவுபடுத்தும் விதமாக பேசிஉள்ளீர் என்னை நான் ஒன்றும் காக்கிரஸ்,திமுகவே அல்ல அவர்களை வெறுப்பவன்
ஆரம்பத்தில் நானும் நாம் தமிழர் கட்சி மீது நன்மதிப்பு வைத்து இருந்தேன் ஆனால் சமீபத்தில் youtubeல் அவரின் பேச்சை கேட்டேன் கடவுள் பற்றி இழிவாக பேசினர் அவர் கடவள் கெஎள்கை மறுபவராக இருக்கட்டும் ஆனால் மற்றவர்கள் மனம் புண்படுத்தும்படி பேசிஇருக்ககூடாது
கடவுள் மறுப்பாளர்கள் அவரவருடைய வீட்டை சுத்தம் செய்து விட்டு வெளியே வந்து சுத்தம் செய்ய வேண்டும். வெளியே ஒரு வேஷம் போட்டு வீட்டுக்குள்ளே மனைவி சொன்னால், அம்மா சொன்னால் ஆத்தா சொன்னால் என்று தூப தீப ஆராதனை செய்வதுதான் இந்நாளைய கழகத்தார் கொள்கை என்றால் அது அவர்களை மட்டும் முட்டாளாக்கிக் கொள்வது அல்ல மாறாக அதை கேட்பவர்களையும் முட்டாள்கலாக்குன்றார்கள் என்றே அர்த்தம். கருணாநிதி வீட்டில் நடப்பதென்ன, வைகோ வீட்டில் நடப்பதென்ன?. ஏன் அவ்வளவு தூரம் போவானேன் இங்குள்ள பட்சி ஒன்று காதோரமாக வந்து, வெள்ளி மாநிலத்தில் உள்ள ‘கலக’த் தலைவர் ஒருவர் வீட்டில் தூப தூபம் போட்டு இறக்கிக் கொண்டுதான் இருக்கின்றார் என்று சொல்லி விட்டு போகுது. இப்படி தங்களுக்கே நம்பிக்கை இல்லாத ஒரு தத்துவத்தை பொதுத் தெருவில் போட்டு உடைத்தால் சாலையில் போக்கு வரவு உள்ளோர் எல்லோரும் காறித் துப்பி விட்டுத்தான் போவார்கள்.
நிறைகுடங்கள் தளும்பாத காரணத்தினால்தான் இன்று கூத்தாடும் குறைகுடங்கள் எல்லாம் குத்தாட்டம் போடுகின்றது.
காயு மற்றும் தமில்பொன்னு! மற்றும் திராவிட பொங்கல் அனைவருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை வாழ்த்துக்கள் ..
விடுமுறைக்கு பிற்பாடு நாம பழகுவோம் வாங்க..
இப்போ கொஞ்சம் கிருஸ்தவ தமிழர்களோடு பழகிட்டு இருகிறேம்பா ..
இந்து தர்மரே ,உமக்கு அறிவு ஆதாவது சிந்திக்கும் அறிவு குறைவு என்பது எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி பிறகு ஏன் தேனீ அக்கா அறிவுரை கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர் , நீ இந்தியனே இல்லை என்று எத்தனையோ கட்டுரை யாளர்கள் கூறியும் உன் மர மண்டைக்கு ஏன் ஏற மாட்டுது இந்தியா என்று ஒரு நாட்டை உருவாக்கி விட்ட ஆங்கிலேயன் உன் மாமனா அல்லது மச்சானா நைனா . .
தமிழ் பித்தரே >> தேனீ அக்கா அறிவுரையை கேட்டே ஆகவேண்டும் என்பது சட்டமா ??நீங்கள் சொல்ல சொல்ல தலையாட்ட > நீர் என்ன பெரிய பண்ணையா ??கேள்வி ஒன்றை கேட்டால் சுற்றி வந்து கோளாறு கதைகளை அளக்கும் உமக்கு இப்பகுதியில் என்ன வேலை ?? அதற்க்கு சரக்கு உள்ள தேனியின் அளப்பரையே மேல் >>>
இந்து தர்மரே ,நல்ல கருத்தை யார் கூறினாலும் கேட்க தான் வேண்டும் அது அறிவு உள்ளோருக்கு அழகு ,எப்பொருள்
எவர் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது
அறிவு ,ஒ உங்களுக்கு தான் அது இல்லையே ,ஒரு தமிழனுக்கு
இங்கு என்ன வேலை என்று கேட்கும் உன் அறிவை என்ன வென்று கூறுவது ,செம்பருத்தி ஒரு இந்து மத இனைய தளம் என்றால் கண்டிப்பாக எனக்கு இங்கு வேலை இல்லைதான்
ஆனால் இது தமிழ் இல்னைய பக்கம் ,இந்த தமிழ் இணைய
ஏட்டில் புகுந்து ஆரிய கூத்தாடிகள் தமிழர்களை வசைபாடி னால் தன்மானம் உள்ள எந்த தமிழனும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டன் . தேனீ யும் ஏன் ஈக்களும் உம்மை கொட்டும் புரியுதா நைனா . ஆமாம் நீர் இந்து தர்மர் என்று
கூறுகிறீர்களே ஏன் இந்துவுக்கு மொழி இல்லையா அல்லது இந்து (சம்ஸ்கிருத ) மொழியை படிக்க வில்லையா .
கடவுள் மறுப்பவர்கள் முதலில் தங்களின் வீட்டில் உள்ளவற்ற்களை திருத்திய பின்பு தான் பொது மக்களை
திருத்த முயன்றார்கள் ,அந்த முயற்சியெல்லாம் மறைந்த
திருச்சுடர் ராமசாமி யுடனும் , சூழ்ச்சியால் பதவி விளக்கம்
கண்ட ரே .சு.முத்தையாவுடன் காலாவதியாகிவிட்டது ,
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் ஒருசிலர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னமும் தந்தை பெரியாரின் கொள்கையை முழுமையாக வீட்டிலும் வெளியிலும் பரப்பி வருகிறார்கள் ,அதே வேலை மலேசிய
திராவிடர் கழக பத்விக்காக ஆலய மணியை அடிக்கும் பூசாரிகளும் ,கிறிஸ்துவ மத்தினரும் கழகத்தின் தலைவர்
பதவிக்காக நாகளும் சீர்திருத்த வாதிகள் என்று கூறி
உலகத்தை ஏமாற்றி வருகின்றனர் ,என்ன செய்வது நைனா
நாலு முட்டாள் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது தான் இப்போது கழகத்தின் நிலைமை .
நாங்கள் தமிழர் எங்கள் மரபுவழி
தமிழியல்.. தமிழனக்கு சமயம் உண்டு ஆனல் மதம் இல்லை..
தமிழர்கள் சமயம்..
1 சைவர்கள்
2 வைணவர்கள்.. வரலாற்று படித்து புரிந்து கொள்ளுங்கள்.. நன்றி