தமிழர் என்ற அடையாளம் பிறப்பு

kalaimugilanகோலாலம்பூர்,

நாங்கள் இந்தியர்கள் அல்ல , நாங்கள் தமிழர்கள் , இதுதான் எங்களுடைய காலம் காலமான தொன்மையான உண்மை அடையாளம் என்று மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் தெரிவித்தார்.

இந்தியர் என்றால் என்ன ? அதன் கலாச்சாரமும் பண்பாடும்  என்ன ? அதன் தாய்மொழி என்ன ? அதன் வழிபாடுகள் என்ன ? என்று கேள்விகனைகளை நாமே கேட்டாலே , ”இந்தியர்” என்பது அர்த்தமற்றது என தெளிவாக புரிய வரும் என்றார் அவர்.

வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் வெள்ளைக்காரன் ஒருங்கிணைந்த மாநிலங்களை ஆட்சி செய்து அதை இந்தியா என்று பெயரிட்டதும் அவனே என்பது உலக வரலாறு.

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றப்பட்ட மூத்த இனம் தமிழர் இனம். தமிழரின் முத்த 10,000 ஆண்டுகளுக்கு பழமை இலக்கிய இலக்கண  நூலில் முதல் பாயிரத்திலே ”தமிழ்” என்று குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் என்பது விளங்கி கொள்ளலாம் என்றார் கலைமுகிலன்.

இதே எல்லாம் நாம் தமிழர் என்பதற்க்கான சான்றுகள், வரலாறுகள். சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தவரான புரிதலால் நாம் இந்தியர் என்று அடையாளபடுத்த பட்டு வருகிறோம். ஆனால் இப்போது  இளைய தலைமுறையினர்கள் நம் இனத்தின் அடையாளத்தை தெளிவாக புரிந்து வருகிறார்கள்.

மேலும் , தமிழர் என்ற இனம் வெறும் நேற்று தோன்றிய இனம் அல்ல , அது ஒரு தேசிய இனம் சுமார் 75 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம். கணக்கெடுப்பில் பார்த்தால் 10 வது பெரிய இனமாக இருக்க வேண்டிய அங்கிகாரம் கொண்டவை ஆனால் அதற்கு தனி நாடு இல்லாமல் இருப்பதால் அந்த 10 வது என்ற அங்கிகாரம் இல்லாமல் இருக்கிறோம்.

தமிழர்க்கென்று பண்பாடு , கலை கலாச்சாரம் , மொழி , விழாக்கள் , வழிபாடுகள் , பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தனி குணமும் உண்டு என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைபாளரான கலைமுகிலன் வலியுறுத்தினார்.

மேலும் சொல்ல போனால் நம்முடைய உறவுகளாக இருக்கும் தெலுங்கர்கர்களும் கன்னடர்களும்  ஏறக்குறைய 1,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே , அது போலே மலையாளி உறவுகளும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே.

இப்படி இதுபோன்று  தமிழர் இனத்திலிருந்து பிரிந்து இன்று சிறு சிறு இனமாக இருக்கும் பல இனங்களின் மொழியுக்கு தாய்மொழி தமிழ் மொழி ஆகும். ஆகையினால் இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு நாம் தமிழர் இயக்கம் ஆவணங்களை தயார்படுத்தி வழங்க உள்ளது.

மலேசியா தமிழர்களும் அவர் அவர் குழந்தைகளின் பிறப்பு பத்திரத்தில் ”தமிழர்” அல்லது ”தமிழ்” போடுமாறு கேட்டு கொண்டது. பிறப்பு பத்திரத்தில் தமிழ் என்று எழுதும் வசதி பல ஆண்டுகளாகவே உள்ளது. இருப்பினும் இந்த கோரிக்கை தமிழர் என்ற இனத்திற்கு அங்கிகாரம் வேண்டி கொடுக்கபட்வுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியர் என்று சொன்னால் ”தமிழர்” , ‘மலையாளி ‘, ‘தெலுங்கர்’ ஒன்று படுத்துவற்றக்கான ஒற்றுமைகள் ஏதும் இல்லை ,ஆனால் தமிழ் என்று சொன்னால் இந்த மூன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையை கொண்டு வரலாம்.

முதலாவது மூன்று இனங்களும் தமிழ் மொழியை பயன்படுத்துகிறார்கள் மற்றுமொன்று இந்த சிறு சிறு இனங்கள் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து போனவை என்பதால், தமிழர்  தமிழ் மொழி குடும்பம் என்று ஒன்று படுத்தலாம் என்றார் அவர்.

இது தொடர்பாக ஆழமான  செய்திகள் தெரிந்து கொள்ளவோ அல்லது  அரசுக்கு விண்ணப்பம் கொடுபதற்க்கு ஆதரவு வழங்கவோ 0135227795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்அஞ்சல்: [email protected]