தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாட்டை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.
கடந்த வடமாகாண சபை தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், தனி நாட்டை உருவாக்குவது குறித்து கூறப்பட்டிருந்ததாக தெரிவித்து ஐந்து மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
எனினும் தனிநாட்டை உருவாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்து, ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த சத்திய கடதாசியில், தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து இந்த விடயத்தை தெளிவு படுத்தி மற்றுமொரு சத்தியகடதாசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொhடர்பில் தீர்மானிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கால அவகாசம் வழங்கும் வகையில், இந்த வழக்கின் விசாரணைகளை அடுத்தவருடம் பெப்பரவரி மாதம் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-http://www.pathivu.com


























இதையும் நம்ப மறுக்கிறான்,அதையும் நம்ப மறுக்கிறான் சிங்களவன்.அதைவிட சிறந்த வழி தனி நாடு பிரகடனமே.