வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, ஐரோப்பிய நாடுகள் தூதர்களிடம் மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று ஐரோப்பிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். அவர்கள் முதலில் தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை சந்தித்துவிட்டு பின்னர் திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்ததாகத் தெரிய வருகிறது.
இன்று மதிமுக பொது செயலாளர் வைகோவை அவர்கள் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களிடம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும், இலங்கை அரசின் மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ கோரிக்கை வைத்ததாகவும் தெரிய வருகிறது.
இதை வைகோ பின்பு செய்தியாளர்களிடம் உறுதிப் படுத்தி உள்ளார்.
-http://www.puthinamnews.com
வாயே மூடு எதாச்சும் சொல்லிட போறேன் ……. மானம் கேட்ட…………….