இலங்கை வரலாற்றை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த எந்தவிதமான ஒரு தீர்க்கமான முடிவினையும் இது வரைக்கும் இந்தியா வழங்கியதில்லை என்பது உலகறிந்த உண்மை.
அது போன்று தற்போது பிறந்துள்ள சிறு பிள்ளைகளும் சொல்லும் இந்தியா தன்னுடைய நலன் சார்ந்த விடயங்களுக்காக மட்டுமே செயற்படுகின்றது.
உலகநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்த தேர்தல் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முன் வைப்பதன் மூலம் தங்களுக்கு எந்த ஒரு முடிவினையும் எடுக்க முடியாமல் போயுள்ளதாக தமிழர்களின் சில அறிக்கைகள் கூறுகின்றது .
இப்போது விடயம் என்னவென்றால் பழைய கதைகள் எல்லாம் மறந்து விடுவோம், ஏனென்றால் இவ்வளவு காலமும் நாம் அதற்காக குரல் கொடுத்து ஏமாந்து போயுள்ளோம்.
இந்தியாவின் துரோகங்கள் இன்று நேற்றல்ல அகிம்சை வழிப் போராட்டம் தொடக்கம் ஆயுதப் போராட்டம் வரை தமிழ் இனத்துக்கு செய்தது அனைத்தும் துரோகம். ஒரு நல்ல விடயம் கூட செய்யவில்லை.
தமிழர்களின் நலன் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக இந்திர காந்தியின் 14 அம்ச கோரிக்கை முதல் அனைத்தும் வெறும் நாடகமே.
இலங்கையில் நடந்து கொண்டிருந்த அனைத்து விடயங்களை இந்தியா நேரில் சென்று பார்த்திருந்த போதும் தமிழர்களுக்கான எந்த ஒரு தீர்வு திட்டத்திலும் தமிழர்கள் நலன்சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.
அன்று தீலிபனை கொன்றதும் இந்திய அரசாங்கம், இன்று பாலச்சந்திரனை கொன்றதும் இந்தியா என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
தேர்தலை முன் நிறுத்தி இன்று இலங்கை அரசங்கம் வெளியிடும் அறிக்கைகளும் மிகவும் வேதனை அளிக்கும் விதத்தில் உள்ளது.
இலங்கையில் நடந்த யுத்தத்தில் சகல விதத்திலும் எம்மை விட முன் வந்து யுத்தத்தை நடத்திய இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தமை போன்ற விடயங்கள் அனைத்திலும் இந்தியா செய்தது துரோகமே.
இனிமேலும் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் இந்தியா உதவும் என்பது முட்டாள்தனமான செயலாகவே இருக்கும்.
நேற்று இலங்கை அதிபருக்கு தரிசனம் கொடுத்த இந்திய அரசாங்கம் இன்று தமிழர் தலைமைக்கு தரிசனம் கொடுக்க அழைத்துள்ளதா என்ற கேள்வியும் ஒன்று உருவாகியுள்ளது.
அல்லது இலங்கையில் வைத்து விலை பேசினால் விபரீதமாகிவிடும் என்று இந்தியாவில் வைத்து விலை பேசப்படுகின்றதா?.
தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் செயற்படுகின்றார்களா? என பாரிய கேவிகள் இன்று மக்களுக்கு உருவாகி உள்ளது.
தனக்கு வாக்களித்த மக்களை விட இந்தியாவின் ஆலோசனை முக்கியம் என நினைக்கும் இது போன்ற தலைமைகள் தமிழர்களுக்கு தேவையா?
வயதுகள் போய் வாக்கு மாறி விட்டதோ என்ற பாரிய கேள்விகளும் உள்ளது. இலங்கை மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தமிழ் தலைமைகள் மாயாஜால அரசியலே செய்கின்றன.
தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் தாங்களாகவே முடிவெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
வெற்று பேச்சு அரசியல் மாயாஜாலம் இனி எமது மக்களுக்கு காட்ட முடியாது. இலங்கை மக்களுக்கு தீர்வு ஒன்று வருமானால் அது இலங்கை அரசால் மட்டுமே முடியும்.
இந்தியா எம்மை வைத்து அரசியல் நாடகம் மட்டுமே நடத்துகின்றது என்பது அரசியல் தலைமைகள் அறியாவிட்டலும் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.
எம்மை வைத்து கதை எழுதவும் படம் நடிப்பதற்கும் மட்டுமே மற்றும் படி எந்தவிதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
இலங்கையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தலைமைகள் சுயமான முடிவு எடுக்காததே இன்று எமது சமூகம் சீர்குலைய காரணம்.
மக்கள் தெளிவாக செயற்படும் காலம் இதுவே ஏமாறாத சமூகம் நல்ல ஒரு முதுகெலும்பு உள்ள தமிழ் தலைமையை உருவாக்கும் பொறுப்புக்குரியவர்கள் நீங்களே.
எஸ் கே – [email protected]
-http://www.tamilwin.com

























