மைத்திரிக்கு 98வீதம்! மஹிந்தவிற்கு ஒன்றுமில்லை!

mavai-senathirajahஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவாக 98 சதவீதமும் தேர்தலையே புறக்கணிக்க வேண்டுமென 2 சதவீதமும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் இன்றைய வவுனியாக்கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்த வேளையிலேயே இக்கருத்து கணிப்பினில் தெரிவிக்கப்பட்டது.எனினும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அரசியல் குழுவின் ஊடாக கூட்டமைப்பிடம் முன்வைக்கப்படும். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பின்னர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் இன்று முற்பகல் 10 மணி முதல் மாலை 5.30 வரை இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடங்கள் குறித்தும் கல்துரையாடியிருந்தோம். இந்தக் கூட்டம் கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது.

பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதன் போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்தனவாக இருந்தன. இன்று இந்த கருத்துக்களை உள்வாங்கி, தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஊடாக ஆராய்ந்து பொருத்தமான முடிவை எடுக்கவுள்ளோம். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கப்படும். அதன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் எடுக்கும் என மாவை மேலும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில் தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என ஏன் கோருகிறீர்கள் என கேட்கப்பட்டபோது – அது மக்களின் ஜனநாயக உரிமை. அதனைப் பயன்படுத்துமாறு கோருகின்றோம். வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் மைத்திரியினையோ மஹிந்தவையோ ஏற்றுக்கொள்ளாது நிராகரிக்க வேண்டுமென இளைஞரணிய மற்றும் பிரதி தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் போன்றவர்கள் வாதிட்ட போதும் 98 சதவீதமானோர் மைத்திரியை ஆதரவிக்க கருத்து தெரிவித்துள்ளனர்.எனினும் எவரும் மஹிந்தவிற்கு ஆதரவை மறந்துகூட வெளியிட்டிருக்கவில்லை. -http://www.pathivu.com

TAGS: