எம்மவரின் மௌனம் கலைவது எப்போது? – கதிரவன்

mymaதேர்தல் தேர்தல் என்று ஒருவாறு தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது? ஏய்ப்பவருக்கே காலம் என்று எண்ணியிருந்த மகிந்தாவின் ஆட்சிபீடமும் ஆட்டம்காணத் தொடங்கியுள்ளது.

தனது கோட்டைக்குள்ளே இருந்தே தனக்ககு எதிராக எதிரணிகள் களமிறங்கும் என்று மகிந்தர் கனவுகூட கண்டிருக்கமாட்டார் ஆனால் மாற்றம் ஒறுதான் உலகத்தில் மாற்றமில்லாத ஒன்று எனவேதான் எப்போதும் தாமே ஆட்பீடத்தில் அமரவேண்டும் என்ற பேசாசையுடனும் தன்னைவிட்டால் ஒரு தலைவன் சிங்களமக்களுக்கு இல்லை என்ற நப்பாசையுடனும் இறுமார்ந்துபோயிருந்த மகிந்தர் இன்று தான் எதிர்பார்க்காத பல மாற்றங்களுக்குள் மாட்டிக்கொண்டு எந்தப்பக்கம் செல்வதென்று தெரியாது முட்டிமோதிக்கொண்டிருக்கின்றார் இதுதான் யதார்த்தம் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல எதிரனியினர் உருவாகியுள்ளனர் ஆனால் இதில் வெல்லப்போவது யார் என்பதனைத்தீர்மானிக்கும் சக்தி பொதுமக்களிடமே உள்ளது
எனவே அதை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

ஆனால் இதுவரைக்கும் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் அவர்கள் வாக்குகளால் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள் ஆனால் ஒவ்வொருமுறையும் வாக்களித்துவிட்டு தோற்றுப்போய்விடுகின்றனர் தமிழர்கள். தேர்தல் என்று வந்துவிட்டால் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் பல வேட்ப்பாளர்களுக்கு மத்தியிலே இம்முறை எதிர்க்கட்சி வேட்பாளராக புதிதாகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்கள் ஏதும் இல்லை என்பதை வெளிப்படையாகவும் மிகவும் துணிகரமாகவும் வெளியிட்டுள்ளார் வேட்பு மனுத்தாக்கல்செய்துவிட்டே இவர் தமிழர்களைப்புறக்கணிக்கின்றார் தமிழர்களின் நலன் சார்ந்த விடயங்களில் தனக்கு அக்கறை இல்லை என்பதை
மறைமுகமாக கூறியுள்ள இவர் ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் தமிழர்களின் நிலை என்ன? இவர் ஆட்சிபீடடத்தில் அமர்ந்தால் தமிழர்களுக்கு அப்படி என்ன தீர்வினைப்பெற்றுக்கொடுத்துவிடப்போகின்றார் ,என்ற கேள்வி பலமாக எழுகின்றது,

சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழர்களை வெறும் வாக்கு இயந்திரங்களாக மட்டுமே பார்கிறார்கள் இதுவரையில் தமிழர்களை எந்த ஒரு சிங்கள தலைவர்களும் தமது நாட்டின் குடிமக்களாக நினைத்து ஆட்சிசெய்யவில்லை அப்படி நினைத்திருந்தால் இவளவு இன்னல்களையும் இழப்புக்களையும் தமிழர்களுக்கு கொடுத்திருக்க மாட்டார்கள்.

அறுபதுவருடத்துக்கு மேலாக அங்கே ஆட்சிபீடத்திலும் அதிகாரம் உள்ள இடங்களிலும் சிங்களப்பேரினவாதிகள் மட்டுமே அமர்ந்துகொள்கின்றனர் இந்த அறுபது வருடத்தில் ஒரு தடவைகூட தமிழ்பேசும் மக்களின் விருப்பத்துக்குரிய எவராலும் ஆட்சிபீடத்திலோ அதிகாரம் உள்ள இடங்களிலோ அமரமுடியவில்லை என்றால் இது எப்படிப்பட்ட ஒரு பேரினவாதப்போக்குடைய நாடு என்பதனைத் தெளிவுபடுத்தும்.

ஒவ்வொரு தேர்தலிலும் யாருக்கு வாக்களிப்பது யார் எமது நலங்களில் அக்கறை காட்டுவார் என்று ஒவ்வொருவரும் பல எதிர்பார்ப்புக்களுடன் வாக்களிக்கின்றார்கள் ஆனால் யார் ஆட்சிக்குவந்தாலும் ஆட்சிக்கு வந்த சிலநாட்களிலேயே கடிவாழம் உள்ள கழுதைகளாக தமிழர்களை நினைத்து தமது கைப்பிடிக்குள்ளோ கட்டுப்படுத்திவைப்பதற்கே எத்தணிக்கின்றார்கள் இனப்பிரச்சினை பயங்கரவாதம் என்ற இரண்டையும் வைத்து தமது நாற்காலியினை பலப்படுத்திக்கொள்கின்றார்களே தவிர இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க நினைக்கவில்லை இவையெல்லாம் அனுபவரீதியாக தமிழர்கள் நன்கு உணர்ந்து
கொண்டுள்ளனர் வரலாறுதான் எமது வழிகாட்டி எனவே கடந்தகால வரலாறுகள் சொல்லும் எமக்காண வழி என்ன என்பதை அனுபமே சிறந்த ஆசான் எனவே இந்த சிங்களதேசத்தைப்பற்றியோ அதன் சட்டதிட்டங்கள் பற்றியோ எமக்கு யாரும் கற்றுக்கொடுக்கத்தேவையில்லை.நாங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம் இனி சிங்களதேசத்திற்கு தமிழர்களாகிய நாம் புதியபாடங்களைப்புகட்டவேண்டுமே தவிர புதிதாக அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஒண்றும் இல்லை

இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு என்பது வெறும் பெயரளவில் மட்டுமே தவிர அது ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கும் ஒரு சர்வாதிகார நாடு இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வாக்குரிமை என்ற ஒன்று உள்ளது ஆனால் அதையும் யாருக்கு பேடவேண்டும் என்பதைக்கூட அவர்களால் தீர்மானிக்கமுடியாத ஒரு சர்வாதிகார ஆட்சிதான் இங்கே நடக்கினறது இந்த சர்வாதிகார ஆட்சியில் இருந்து தமிழர்கள் விடுதலையடையவேண்டுமேயானால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அது முடியாது இதனை தமிழர் தரப்பிடம் சிங்களமேலாதிக்கவாதிகள் தமது பல கொடுரச்சொயல்கள்மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் அப்படியாயின் இந்த
ஈழத்தமிழகளின் நிலைதான் என்ன? அகதிவாழ்வும் அடிமை வாழ்வும்தான் இவர்கழின் தலைவிதியா?

இரண்டுபோயிருந்த மூலை முடக்குகளெல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சற்றுப்பிரகாசிக்கத்தொடங்கியுள்ளன. வீதிகள் எங்கும் சுவரொட்டிகளும் கட்சிக்கொடிகளும் என்று அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளுள் கட்சித்தாவல்களும் பல வியாக்கியானங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மெல்லமெல்லச்சூடுபிடித்துள்ளது தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இதிலே ஒன்றை அவதானிக்கவேண்டும் எப்போது விடியல் என்று வானத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் தமிழினத்திற்கு எந்த விதத்திலும் இந்த தேர்தல் நன்மையளிக்கப் போவதில்லை காரணம் விடுதலை என்ற வெளிச்சத்தை விழுங்கிவிடும் கருநாகங்கள்தான் இன்று தேர்தல்க்களத்தில் நிற்கின்றன.

பல்லாயிரம் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த மகிந்தா அண்மையிலே தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது போரின்போது எந்த ஒரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என்றும் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் என்று நாவிலே கூச்சமும் நெஞ்சிலே இரக்கமும் இன்றி கூறியுள்ளமை அடுத்து இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு என்ன பிரளயத்தை உண்டுபண்ணுவார் எனபதைத் தெளிவுபடுத்தும் ஈழத்தமிழனாகப்பிறந்த ஒரே குற்றத்திற்காக எத்தனை குழந்தைகள் படுகொலைச்செய்யப்பட்டன அவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகளா ? அப்படியாயின் ஒட்டுமொத்த தமிழர்களுமே பயங்கரவாதிகள் அந்த பயங்கரவாதிகள் ஏன் இம்முறை வாக்களிக்கவேண்டும் என்று எதிர்வுகூற எம்மிடத்தில் பலமான தலைமையில்லை என்றுதானே கூறவேண்டும்.

அடுத்து எதிரணியில் பொட்டியிடும் மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் நலன்சார்ந்த விடயங்கள் யாவும் இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார் தமிழர் நலன்சார்ந்து சிந்திக்காத ஒருவன் எமக்குத்தேவையில்லை என்று அறிக்கைவிட எம்மிடத்தே எவருமில்லையா? வேகமாகவும் விவேகமாகவும் செயற்படவேண்டிய எம்மவர்கள் எங்கே? இந்தத்தேர்தலிலே தமிழர்களின் நிலைப்பாடு என்ன ? இந்த தேர்தலைத்தமிழர்கள் புறக்கணித்து எமக்கான நிரந்தரமான ஒரு தீர்வு கிட்டும்வரைக்கும் நாங்கள் எவருமே எந்தஒரு தேர்தலிலும் வாக்களிக்கப்போவதில்லை என்று சர்வதேச நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியினை எடுத்துக்கூறமுடியும் எனவே இந்த தேர்தலை மட்டுமல்லாது இனி வரப்போகும் எந்த ஒரு தேர்தலுக்கும் வாக்களிக்காது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலே தமிழ்
தலைவர்கள் வாக்குச் சீட்டினைக்கிழித்து எறிந்து இந்த நாட்டிலே நாங்கள் வாக்குரிமை அற்றவர்கள் என்பதை சர்வதேசம் வரை எடுத்துச்சொல்வாரேகளா?

அல்லது இந்தத்தேர்தலைப்புறக்கணிப்பதினால் தமிழர்கழுக்கு பாதிப்புகள் ஏதும் உள்ளதா வாக்களிப்பதனல் நன்மைகள்தான் ஏற்பட்டுவிடுமா என்பதை தெளிவு படுத்தவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாணசபையும் தொடர்ந்து மௌனம் காப்பது ஏதற்காக?

ஆலோசனை செய்கின்றோம் கலந்துரையாடுகின்றோம் என்று இன்னும் எம்மவர்கள் மௌனம்காத்துக்கொண்டிருப்பது ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கத்தெரியாதவல்களை நாம் தெரிவுசெய்துவிட்டோமா என்ற சந்தேகம் நிச்சயமாக தமிழர்கள் மத்தியிலே எழத்தான் செய்யும் .காலம் கடந்து வரும் ஞானத்தினால் பல சந்தர்ப்பங்களை நாம் இழந்துவிட்டோம் எனவே தேர்தல் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவினை தமிழர்தரப்பு எப்போதே எடுத்திருக்கவேண்டும் இது ஒன்றும் திடீரென்று வரும் சுணாமி அல்லவே பலமாதங்களாகவே தேர்தல் எப்போது என்று இழுபறிப்பட்டு ஒருவாறு அடுத்த ஆண்டின் முதல் மாதத்திலே அது நடைபெறும் என்று அது அறிவிக்கப்பட்டுவிட்டது ஆனால் இன்னமும் தமிழர்தரப்பு ஒரு தீர்க்கமான முடிவினை எடுகாதது உகந்ததல்ல காரணம் மேய்ப்போன் இல்லாத மந்தைகளாக
அலைந்துகொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களை எப்படியாவது ஈர்த்துக்கொள்ளவேண்டும் என்று சிங்களத்தின் அடிவருடிகளும் ஒட்டுக்குழுக்களும் மகிந்தாவுக்கு ஆதரவாக கழமிறங்கியுள்ள சுயேட்சைக்குழுக்களும் மும்மரமாக போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றபோது தேர்தல் பற்றிய விழிப்புணர்வோ அரசியல் தெளிவோ அற்ற மொதுமக்களும் வேலைவாய்பற்ற இளைஞர்களும் அவர்கள் பக்கமாக சாயத்தொடங்கியுள்ளனர் என்பது யதார்த்தம்.

வெறுமனே எமது மக்கள் தெளிவாக உள்ளனர் மக்களுக்கு எல்லாம் தெரியும் மக்களை யாரும் ஏமாற்றமுடியாது என்று வீண்வசனங்கள் மட்டும் பேசும் தமிழர்களின் பிரதிநிதிகள் வரப்போகும் தேர்தல் பற்றியோ அதன் நன்மை தீமை பற்றியோ இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடு பற்றியோ இதுவரைக்கும் மக்களைத் தெளிவுபடுத்தியதுண்டா தமது நிலைப்பாடு என்ன என்றோ இந்தத்தேதலில் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்றோ இன்றுவரை பொதுமக்களுக்காக எந்த ஒரு தலைவரும் வாய்திறக்கவே இல்லை.

இவர்களின் இந்த மௌனம் எப்போது கலையும் என்பது தெரியவில்லை ஆனால் இவர்கள் மௌனம் கலைந்து போசும்போது அவை பலனற்றதாகவே இருக்கக்கூடும் காரணம் இன்று வேலைவாய்புகள் இன்றி அவதிப்படும் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு என்ற மீனுக்கு ஆசைப்பட்டு இனவாதிகளினதும் துரோகிகளினதும் தூண்டிலிலே மாட்டிக்கொண்டுவிட்டனர் இது அவர்கள் தவறல்ல
அவர்களது சூழ்நிலை அப்படியுள்ளது மேப்போன் இல்லாத ஆடுகள் என்ன செய்யும் அடுத்து வறுமையின் பிடியில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்கள் அரிசிக்கும் பருப்புக்கும் ஆசைப்பட்டு அரசியல் கோமாளிகளின் வாசல்களிலே கூடிநிற்கின்றனர் இனத்தை அழித்தவனின் தேர்தல் சுவரொட்டியினை ஒட்டுவதற்காக எத்தனையோ கைகள் வாங்கிவிட்டன இவர்களுக்கான சம்பளம் 1000 ரூபா அதவிட பல சலுகைகள் இது தவறு இதை வாங்காதீர்கள் என்று கூறமுடியாது அவர்களின் சூழ்நிலை அது மக்கள் தெளிவாக உள்ளனர் மக்கள் ஏமாரமாட்டர்கள் என்று கூறுபவர்கள் வேண்டுமானால் யாழ் ஈ.பி டிபி ஒட்டுக்குழு காரியாலயங்களின் வாசல்களைச்சென்று பார்க்கட்டும் மின்சாரம் அற்றவர்கு மின்சாரம் வீடு இல்லாதவர்கழுகு வீடு வேலை இல்லாதவர்களுக்க்கு வேலை என்று கூவிக்கொண்டும் அதை நடைமுறைப்படுத்திக்கொண்டும் உள்ளனர்
பாமரமக்கள் என்ன செய்வார்கள் மௌனமாக இருக்கும் தமிழர்தரப்பினரை நாடுவார்களா? கேழுங்கள் தரப்படும் என்று முழக்கமிடும் துரோகிகள் பக்கம் செல்வார்களா?

யாரையும் குறைகூறவேண்டும் என்றோ விமர்சனம் செய்யவேண்டும் என்றோ இதனை நான் இங்கே குறிப்பிடவில்லை எமது எதிர்காலம் என்ன எமது தலைவர்கள் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுகின்றார்கள் என்பது உன்மை ஆனால் சிலவேளைகளில் தடுமாறுகின்றார்களே அரிய பல சந்தர்ப்பங்களை தவறவிடுகின்றார்களே முக்கியமான பல சந்தர்பங்களிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இந்தியாவிற்கு போவதும் அங்கே பேச்சுக்களை நடாத்துவதும் வழக்கமாகக்கொண்டுள்ளார்.

அதேபோல இம்முறையும் இந்தியாவிற்கு சென்றிருக்கின்றார் இது நகைப்புக்குரிய விடயம் தமது மக்களிற்காக தாம் என்ன முடிவு எடுக்கவேண்டும் என்று தெரியாதவர்களைத்தமிழர்கள் தெரிவுசெய்துவிட்டார்களா என்ற தந்தேகம் வழுவடைகின்றதே தவிர இவர்கள் எமக்கான ஒரு நல்ல தீர்வினைப் பொற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை தளர்ந்துகொண்டிருக்கின்றது.

அரசியல் நெருக்கடிகள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளாது இந்தியா செல்வதற்கும் இரகசியப்போச்சு நடத்துவதற்கும் இது என்ன நாடகமேடையா? எப்பபோது பார்த்தாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் 13வது திருத்தத்தினை வலியுறுத்தியும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த்தலைமைகள் இன்னும் ஏனோ காலத்தினைக் கடத்திக்கொண்டிருக்கின்றன.

13வது திருத்தம் என்பது தமிழர்களுக்கு எந்தவகையிலும் பயனற்ற ஒன்று அது எந்த ஒரு விதத்திலும் தமிழர்களின் நலன்சார்தது அல்ல என்பதனை சி. அ.யோதிலிங்கம் அவர்கள் மிகவும் தெட்டத்தெளிவாக தனது நூலில் தெளிவுபடுத்தியுள்ளார் தமிழர்களுக்கு பயனற்ற இந்த 13வது திருத்தத்தையே அமுல்ப்படுத்தவிரும்பாத சிங்களதேசம் எப்படி தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படும் 13 மூன்றாவது சட்டமூலம் என்பது ஓட்டைப்பாத்திரம் அதில் தமிழர்களுக்கு நன்மையேதும் இல்லை ஆனால் அதைத்தான் எமக்கு பெற்றுத்தரவேண்டும்
என்று தமிழர்தரப்பு ஒற்றைக்காலில் நிற்பது முறையல்ல எனவே எமக்கான தீர்வுக்காக நாம் புதிய சட்டமூலங்களை தெரிவுசெய்யவேண்டும் அதைவிடுத்து இந்தியா என்ற குரங்கிடம் 13வது திருத்தம் என்ற அப்பத்தினை கொடுத்து தமிழ் சிங்களம் என்ற இரண்டு பூனைகளும் பல இழப்புக்களைச் சந்திக்குமே தவிர நன்மைகளை அல்ல.

எனவே எமக்கான முடிவினை நாமே எடுக்கவேண்டும் மக்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்துகொண்டு செயற்படவேண்டும் நடக்கவிருக்கும் தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பதால் அவளவாக பாதிப்புக்கள் ஏதும் இல்லை என்றுதான் கூறவேண்டும் காரணம் முழுசாக நனைந்தவனுக்கு சான் என்ன முழம் என்னஎன்று கூறுவார்கள் இழப்புக்குமேல் இழப்புக்களை சந்தித்த எமக்கு இனி புதிதாக ஒன்றும் நேர்ந்துவிடப்போவதில்லை எனவே இந்த தேர்தலைப்புறக்கணிப்பதால் நாம் உலகத்தை விழிக்கசெய்து ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கும் சர்வாதிகாரிகளை உலகிற்கு அடையாளமிட்டு காட்டமுடியும்.

இல்லை இந்த தேர்தலிலே வாக்களிப்பதால் தமிழர்களுக்கு நன்மை ஏதும் ஏற்படும் என்று நினைதால் அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்தி தடுமாறிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு தொளிவினைக் கொடுக்கமுடியும் எனவே யதார்தத்தினை புரிந்துகொண்டு எம்மவர்களின் மௌனம் கலையவேண்டும் அது நல்ல ஒரு தீர்க்கமான முடிவினை தமிழர்களுக்கு பெற்றுத்தரவேண்டும் இந்தத்தேர்தலை தமிழர்கள் எந்த வகையில் தமக்கு சாதகமாகப்பயன்படுத்தமுடியுமோ அதனைப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

– கதிரவன்

-http://www.puthinamnews.com

TAGS: