பாக்கிஸ்தான் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களை மேற் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட் சதித்திட்டம் தொடர்பான முக்கிய விபரங்களை பெறுவதற்காக அவரை இந்தியாவிற்கு அனுப்புமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மலேசியா நிராகரித்துள்ளது.47 வயது முகமது சுலைமான் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும்,அவரை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு இந்திய விசேட நீதிமன்றமொன்று விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் மலேசிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுலைமானை இலங்கைக்கு உடனடியாக அனுப்பவேண்டிய தேவையில்லை,அவரை இந்தியாவிற்கு அனுப்பவேண்டும், சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பெங்களுர் இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து முக்கிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என இந்திய அதிகாரிகள் வாதிட்டுள்ளனர். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளதா மலேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
சுலைமான் கடந்த மேமாதம் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்,இவர் ஏப்பிரல் மாதம் கைதுசெய்யப்பட்ட இன்னொரு இலங்கையரான சாகிர் ஹுசைனுடன், இணைந்து சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பெங்களுர் இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. -http://www.athirvu.com

























