தமிழ் மக்கள் தொடர்பில் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதியான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வேட்பாளர்களும் சிங்கள மக்களின் வாக்குகளை கவரும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழர்களுக்கான தீர்வு ஒன்றை சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாது போனால் நிலைமை மோசமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுத்தல் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியேற்றல் என்பன இதில் முக்கியமான ஆரம்ப கோரிக்கைகளாகும்.
இந்தநிலையில் தமிழகம் சென்றுள்ள தலைவர் ஆர்.சம்பந்தன் வந்த பின்னரே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com