முஜாஹிட்: பக்கத்தான் நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்

mujahitபாஸ்  பாரிட்  புந்தார்  எம்பி  முஜாஹிட்  யூசுப்  ராவா, பக்கத்தான்  ரக்யாட்  ஒற்றுமையை வலுப்படுத்தி  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி), ரிங்கிட்  மதிப்புக்  குறைதல்  போன்ற நாட்டின்  முக்கிய  பிரச்னைகளில்  கவனம்  செலுத்த  வேண்டுமே தவிர தேவையற்ற  விவகாரங்களில்  கவனம்  சென்றுவிடக்  கூடாது  என்று  வலியுறுத்தியுள்ளார்.

“அண்மைக்காலமாக  நாட்டில்  பல விவகாரங்கள்  தலையெடுத்து  நாட்டின்  பொருளாதாரத்தைப்  பாதிக்கும்  உண்மையான  பிரச்னைகளிலிருந்து கவனத்தைத்  திசை  திருப்பி விட்டிருக்கின்றன”, என  முஜாஹிட்  எச்சரித்தார். முஜாஹிட்,  கெராக்கான்  எண்டி  பெர்கவுமான் (கேப்)  என்னும்   இனவாத- எதிர்ப்பு  என்ஜிஓ-வின்  தலைவருமாவார்.

அவர், சமூக  ஆர்வலர்களும்  எதிரணி  எம்பிகளுமான  மேலும்  ஒன்பது  பேருடன்  சேர்ந்து  வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில்  பக்கத்தான் “ நாட்டைக் காப்பதில்  கண்ணும்  கருத்துமாக”  இருக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டார்.