பேராக் டிஏபி தலைமையகத்தில் தொங்க விடப்பட்டிருந்த கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துப் பதாதையைக் கிழித்த பெர்காசா உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருப்பதாகக் குறைகூறப்பட்டிருக்கிறார்.
தம் கைகள் கட்டப்பட்டுக் கிடப்பதாகவும் பேராக் டிஏபி அல்லது சம்பந்தப்பட்ட வேறு யாராவது புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்று கூறியதன்வழி அஹ்மட் ஜாஹிட் பெர்காசா உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார் என
கேனிங் சட்டமன்ற உறுப்பினர் வொங் கா வோ கூறினார்.
“சீருடை தரிக்காத போலீசாரும் சிறப்புப் படைப் பிரிவினரும் அங்கு இருந்து நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்”, என வொங் ஓர் அறிக்கையில் கூறினார்.
போலீஸ் பல நேரங்களில் சொந்தமாகவே புகார் செய்து விசாரணைகளை மேற்கொண்டது உண்டு என்றாரவர்.
மாமியார் உடைத்தால் மண் பானை, மருமகள் உடைத்தால் பொன் பானை.
jahid k…. takdaa அதனால் நடவடிக்கை எடுக்க முடியோயலயம்ப்ப மகாதீர் மாமாக நஜிப் வாழ அரசியல் வாழ்கை நிலைக்க அந்த தவளை பன்றி மக்குகள் இவனுங்களுக்கு தேவையாம்
பெர்காசா சண்டியர்கள் தானே..? அது சும்மா விளையாட்டுக்கு செய்தது. அதுக்குப் போயி அலட்டிக்கலாமா…?
எதிர்கட்சியினர் மற்றும் உதயா மீது தேச நிந்தனை சட்டம் தொடுத்த உங்கள் அரசு இப்போது மௌனம் ஏன் ? பெர்கசா உங்கள் நண்பன்.அதனால் நடவடிக்கை எடுக்க மனம் வரவில்லையோ? பாகன்டாதொ நாடாளுமன்ற தொகுதி இந்திய வாக்காளர்களே உங்கள் நிலைபாடு என்ன ?
ரெண்டு பெரும் மாத்தி மாத்தி அடிசிகிட்டு குத்திகிட்டு சாவுங்கடா.
நாடுவிலே மாங்கா ….. kumki நடுவராக வைப்போம்