ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் நலன்கருதி 20ம் திகதி வெயங்கொட – நைய்வல சனச அரங்கில் பிரபல நாடகக் கலைஞர் வில்சன் குணரத்னவின் 8 கதாபாத்திரங்கள் மேடையேற்றப்பட்டன. இந்த நாடகத்தை காண விசேட அதிரடிப்படை ஊனமுற்றோர், ராகம ரணவிரு செவன ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள், ஊனமுற்று படை சிப்பாய்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த கதாபாத்திரங்களில் ஒன்றான தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வரவு 2009 யுத்த வெற்றியின் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி ராஜபக்ஸ மண்டியிட்டு இலங்கை மண்ணை தொட்டு வணங்கும் காட்சி வருகிறது. நாடகக் கலைஞர் வில்சன் குணரத்ன அந்த கதாபாத்திரத்தை நடித்த போது ஊனமுற்ற படை சிப்பாய்களிடம் இருந்து நல்ல கைத்தட்டல்கள் எதிர்பார்க்கப்பட்ட போதும், மாறாக ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் ஒரேடியாக ஊ.. சத்தம் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
ஊ.. சத்தத்திற்கு மத்தியில் நடிப்பை தொடர முடியாத வில்சன் ஆசனத்தில் அமர்ந்து ஊ சத்தம் எழுப்பிய ஊனமுற்ற இராணுவ சிப்பாய்களை ஒருமுறை உற்று பார்த்துள்ளார். ‘இவர்தான் எங்கள் சம்பளத்திற்கு ஆப்பு வைத்தார். யுத்தம் செய்தது நாம். இவன் யுத்தத்தை விற்று எம்மை கவனிப்பது இப்படித்தான்’ என்று அரங்கத்தின் நாலா பக்கமும் ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் சத்தமிட, நாடகம் பார்க்க அதிதிகளாக வந்த மேஜர் ஜெனரல் மார்கள், பிரிகேடியர்கள் தங்களது முகங்களை பார்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-http://www.athirvu.com