ஒரு சமூகம்; தன் மீதுள்ள எல்லா ஒடுக்கு முறைகளையும் தகர்த்து முன்னேற வேண்டும் எனில் அந்தச் சமூகம் கல்வியில் உயர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று(25) யாழ்ப்பாணம் மருதங்கேணி கேவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக மக்களுடன் வாழ்ந்து அவர்களிடம் காணக்கூடிய பிரச்சினைகளான வீட்டுத்திட்டம், மின்சாரம், சுகாதாரம், வாழ்வாதாரம், கிராம அபிவிருத்தி, கடற்றொழிலாளர்களின் பிரச்சினை, இருப்பிடப் பிரச்சினை, வீதித் தேவைகள், தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்தையும் தீர்த்து, அந்த மக்களுக்கு ஒரு ஒளிமயமான வாழ்வை ஏற்படுத்தி வருகின்றோம்.
எமது கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியுpன் ஏனைய உறுப்பினர்கள் ஆயுதமேந்தி போராடியது இன விடுதலைக்கும், மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் விடுதலைக்காகவுமே. இந்த வழியில் எமது கொள்கைகளை வகுத்தே நாம் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால், இந்த உண்மைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் மறைக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள இளம் தலைமுறையினர் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, அவர்கள் இந்த வரலாறுகளை தேடி அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எங்கே தவறு விட்டிருக்கின்றோம் என்பதனை அறிந்துகொள்ள முடியும்.
கடந்த முப்பது வருடங்களாக கொடிய யுத்தத்தின் பாதிப்புக்களைச் சுமந்த ஒரு இனத்திற்குள் இன்னும் சமூக பாகுபாடுகள் காணப்படுவது வேதனைக்குரியது.ஒடுக்கு முறைக்கு எதிராக ஒடுக்கப்படுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் போதே அடக்குபவர்கள் அடங்கி போவார்கள்.எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் வந்து இனத்தின் பேரால் வாக்குகளை அள்ளிச் செல்பவர்கள் பின்னர் அந்த மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்க வருவதில்லை இது எங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள்.
ஆனால் நாம் அவ்வாறில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும் இதனால்தான் நாள்தோறும் தங்களின் பிரச்சினைகள், தேவைகளுடன் மக்கள் எங்கள் அலுவலங்களுக்கு வந்து செல்கின்றனர்.நாங்களும் அரசியல்வாதிகளாக அன்றி அரசியல் போராளியாகவே பணியாற்றி வருகின்றோம். எங்கள் இந்த பணியே எங்கள் மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவும் தெரிவித்தார்
கேவில் மக்களின் பிரச்சினைகள் தேவைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது விரைவில் மீண்டும் இந்த பிரதேசத்திற்கு வருகை தந்து இந்த பிரதேச மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்
பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சமூக சேவையாளர் தர்மலிங்கம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கேவில் பிரதேச செயற்பாட்டாளர் காண்டீபன், பிரதேசத்தின் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-http://tamil24news.com
“தற்போதுள்ள இளம் தலைமுறையினர் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்”. முருகேசு சந்திரகுமாரே, நீரும் கடந்தகால வரலாற்றை மறந்துதான் பேசிக் கொண்டிருக்கின்றீர். மலைநாட்டு தமிழர்கள் கல்வியில் உயர வேண்டும் என்றெண்ணி 30 ஆண்டுகளுக்கு முன்னமே யாழ்ப்பாணம் வந்தபொழுது உமக்கெதற்கு மேல்படிப்பு என்று விரட்டியத்தவர்கள் கல்வியில் உயர்ந்த யாழ்ப்பான தமிழர்கள் என்பதை மறந்து விட்டீரே?. இது என்ன அரசியல் உளறலா?.