மகிந்த நாளை யாழிற்கு விஜயம்: கூட்டமைப்பினரை வளைத்துப்போட பல கோடி பேரம் பேசும் அரசு?

mahinda_rajapaksaஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ நாளை யாழிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இழுத்துப் போடுவதற்கு பல கோடிகளில் அரசு பேரம் பேசி வருவதாகத் தெரிய வருகிறது.

ஆயினும் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தாம் ஒரு போதும் விலை போகப் போவதில்லை என்றும் வாக்களித்த தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யாது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் தமது போராட்ட பயணம் தொடருமென்றும் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து  இன்று வரை தென்னிலங்கையில் கட்சித் தாவல்கள் மற்றும் வெளியேற்றங்கள் என்பன தொடர்ந்தும் நடைபெற்றே வருகின்றன.

இதில் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளில் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தத்தமது கட்சிகளை விட்டு வேறு கட்சிகளிற்கு மாறியுள்ளனர்.

இத்தகைய கட்சித் தாவல்களின் போது பல கோடி ரூபாய்கள் பேரம் பேசப்பட்டு அதற்கமையவே கட்சி தாவல்கள் மற்றும் கட்சி வெளியேற்றங்கள் என்னபன இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதே போன்று தற்போது வடக்கிலும் கட்சிச் தாவல்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக பிரதான இரண்டு வேட்பாளர்களில் ஒருவரான மைத்திரிபால  சிறிசேனாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் எப்படியாயினும் எவ்வளவு கொடத்தும் அரசு சார்ந்த பக்கம் கூட்டமைப்பினரை அனைத்துக் கொள்வதிலேயே அதீதி அக்கறையை அரசாங்கம் செலுத்தியிருக்கின்றது.

இதற்கமைய கூட்டமைப்பினரின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்களையும் ஐனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தரப்பினர்கள் இழுத்துப்  போடுவதற்கும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களையும் பல கோடிகளில் பேரம் பேசி அனுகியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதனை கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மறுத்துள்ளனர்.

அத்தோடு இவ்வாறு கோடிகளுக்கு விலை போகிறவர்கள் நாங்கள் அல்லர். எம்மை நம்பி வாக்களித் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் கொள்ளை கோட்பாட்டுடன் உறுதியாகவே இருப்போம்.

அரசின் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் ஒருபோதும் விலைபோகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளையில் நாளையதினம் யாழிற்கு ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரகை தந்த தேர்தல் பிரச்சாரப் பனிகளில் ஈடுபடவுள்ள நிலையில் ஐனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு மேடைகளில் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு என்பதனைக் காட்டுவதற்காகவே பல கோடிகளில் இப்பேரம் பேச்சு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் கூட்டமைப்பின் பருத்தித்துறை பிரதேச மற்றும் நகர சபையின் உறுப்பினர்கள் அரச பக்கம் கட்சி தாவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே போன்று ஏற்கனவே வவுனியாவிலும் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அரசுடன் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: