அடிமேல் அடி வாங்கி மகிந்தருக்கு அலுத்துப்போய் இருக்கும். இதில் நேற்றைய தினம்(திங்கள்) நடந்த எதிரணியின் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதனை மகிந்தரால் சகித்துக்கொள்ளவே முடிவில்லை. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, நேற்றைய தினம், தான் பிரச்சாரத்திற்கு கடைசி தினம் ஆகும். அன் நாளில் 4 தொலைக்காட்சிகளில், மகிந்த ஒரு நிகழ்சியை ஒளிபரப்ப தயாராக இருந்தார். “ஜனபதி ஜனஹமுவ” என்னும் இன் நிகழ்சியில் மகிந்த தோன்றி தனது வீர தீரங்களை சொல்ல இருந்தாரம். ஆனால் நீதிமன்றம் வைத்தது ஆப்பு.
எதிரணியினர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் உடனடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, இந்த நிகழ்ச்சி TV இல் ஒளிபரப்ப கூடாது என்று கடைசி நேரத்தில் தடை உத்தரவு ஒன்றை வாங்கிவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி, ஐ.ரி.என், ரூபாவாஹினி, தெரன TV , மற்றும் சுவர்ணவாஹினி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தயாராக இருந்துள்ளது. இந்தவேளை நிகழ்சி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் TV நிலையங்களுக்குச் சென்ற வக்கீல்கள், குறித்த கோர்ட் தடை உத்தரவை காட்டி நிகழ்சியை ஒளிபரப்ப கூடாது என்று கூறிவிட்டார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறி எப்படி நிகழ்சியை ஒளிபரப்ப முடியும். இதேவேளை பதில் மனு ஒன்று தாக்கல் செய்து இந்த தடை உத்தரவை ரத்துச் செய்ய நேரமும் இருக்கவில்லையாம். இதனால் TV நிலையங்களின் நிறைவேற்றும் பணிப்பாளர்கள், குழம்பிப்போய்விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதேவேளை குறித்த நேரத்தில் நிகழ்சி ஒளிபரப்பாகவில்லை என்று அலரி மாளிகையில் இருந்து தொலைபேசிகள் TV நிலையத்தை நோக்கி அலறியுள்ளது.
ஆனால் நிறைவேற்று பணிப்பாளர்கள்(CEO) தமது கையடக்க தொலைபேசிகளை அப்படியே அணைத்து வைத்துவிட்டார்களாம்.
-http://www.athirvu.com