எதிரணியிடம் இருந்து மஹிந்த எதிர்பாராத சவாலை எதிர்நோக்குகிறார்!- சர்வதேச ஊடகம்

maithiri_mahinda_001இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து எதிர்பாராத சவாலை எதிர்கொள்வார் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை தேர்தலில் களமிறக்கியுள்ள எதிரணியும் ஜனாதிபதிக்கு பாரிய சவாலை கொடுத்துள்ளது என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சää 2010 ஆம் ஆண்டு பாரிய வெற்றியை பெற்றபோதும்; அவர் இலங்கையில் சிறுபான்மையினர் தொடர்பில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதில் தோல்வி கண்டுள்ளார்.

பதிலாக 2010ம் ஆண்டுக்கு பின்னர் அவரின் ஆட்சியில் ஊழல்களும் துஸ்பிரயோகங்களுமே மலிந்திருந்ததாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவனின் கருத்துப்படிää ராஜபக்ச நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளார்.

அதிவேக பாதைகள்ää பாதை விஸ்தரிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

எனினும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரியாத தேவதையான மைத்திரிபாலவை விடுத்து தெரிந்த பேயான தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இரண்டு வருடக்கால பதவி இருக்கின்ற போதும், ஜனாதிபதி தாமே முன்வந்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்து அதில் இறுகிப் போயுள்ளதாக இலங்கையின் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: