“விடுதலைப் புலிகள்” தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள்: இறுதி நெரத்தில் யாழில் துண்டு பிரசுரம் !

Logo-LTTEபுலிகளை தாம் முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவரும் மகிந்த அரசு, தாமே புலிகள் அச்சிடுவதுபோல ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு யாழில் இறுதி நேரத்தில் வினியோகித்து வருகிறது. இலங்கை அரச படைகள், முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை பிடித்து அவர்களிடம் இந்த துண்டுப் பிரசுரங்களை கொடுத்து வினியோகிக்கச் சொல்கிறார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை மேலும் ஒரு அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது.

TNA தேர்தலை புறக்கணிக்கச் சொல்வதாகவும், இறுதி நேரத்தில் பின்வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் என அரச சார்பு இணையங்கள் போலிப் பிரசாரங்களை அவிழ்த்து விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்த்தரின் தகவலின்படி ஏற்கனவே கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக அனைவரும் மதியத்திற்கு முதல் வாக்களிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். இதேவேளை தேர்தல் புறக்கணிப்பால் லாபம் பெறும் பல்வேறு தரப்பினரும் புனைதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாகவும் அது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வகையில் எத்தகைய எதிர்ப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும் என சமூக அர்வலர்கள் கோரியுள்ளனர்.

-http://www.athirvu.com

TAGS: