இன்றைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு தோல்வி நிலையினை எய்தப்போவது நிச்சயமாகியுள்ள நிலையினில் இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.
அவ்வகையினில் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளினில் வாக்களிப்பு மையங்களை அண்டி மஹிந்த மற்றும் வெற்றிலை சின்னம் பொறித்த துண்டுகள் வீசப்பட்டு செல்வதாக நேரினில் கண்ட பொதுமக்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.மோட்டார் சைக்கிள்களினில் வந்திருந்த நபர்கள் முகம் தெரியாத தலைக்கவசங்களை அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.
இதனிடையெ யாழ். நாவலர் கலாசார மண்டபத்துக்கு வாக்களிக்க வருகை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்துக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கும் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் காட்சிப்படுத்தும் வகையில் காணப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகளுக்கமைய தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்த நிலையில் அமைச்சரின் வாகனத்துக்குள் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மட்டக்களப்பின் வாக்களிக்க சென்ற மக்களை ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
அதே போல் சாவகச்சேரி பகுதியில் வாக்களிப்பதற்கு சென்ற மக்களிடம் வாக்களிக்கவேண்டும் என்று மிரட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
-http://www.pathivu.com
தொடர்புடைய செய்தி ;-
இதுவரை கொழும்பில் 50% வாக்குப் பதிவு!
வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீத விவரம்!
மரத்தில் ஏறி போராட்டம்! மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை!
வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல்.
யாழ் தென்மராட்சியில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில்!
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்கை அளித்தார்!
தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்!
சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது!