இஸ்லாத்தை தீவிரமானது அல்லது தாராண்மைவாதமானது என்று முத்திரை குத்தி முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சித்தவர்கள் பதற்றத்தையும் விபரீதமான சம்பங்களையும் தவிர்க்க அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர்.
மாபிம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை மன்றத்தின் தலைவர் முகமட் அஸ்மி அப்துல் ஹமிட் மேற்கூறப்பட்டவர்கள் மலேசிய முஸ்லிம்களை இரு கூறாகப் பிரிப்பது எதிர்மறையான விளைவுகளையே கொணரும் என்றார்.
இக்கருத்தை 35 மலாய் அறிஞர்கள், பேராக் முப்தி ஹருசானி ஸக்காரியா மற்ரும் பினாங்கு முப்தி வான் சலீம் முகமட் நூர் உட்பட, பகிர்ந்து கொள்கின்றனர் என்று அவர் கோலாலம்பூர் செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.
நாளிதழில் கட்டுரைகள் எழுதும் அந்த எழுத்தாளர்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் மலேசியா ஒரு சகிப்புத்தன்மையற்ற நாடு என்று அவர்கள் கூறுவது அவர்களின் பாரபட்சத்தை காட்டுகிறது என்றாரவர்.
அந்த எழுத்தாளர்களின் கருத்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதோடு அது ஒற்றுமையின்மைக்கு இட்டுச் செல்லும் என்று முகமட் அஸ்மி கூறினார்.
“அவர்கள் (எழுத்தாளர்கள்) மற்றவர்களுக்கு முத்திரை குத்தத் தொடங்கும் போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது குற்றம் சுமத்துகின்றனர். அது விரும்பத்தக்கதல்ல.
“இது மலாய்க்கார்கள் கட்டுப்படுத்த முடியாதவர்கள், பேராசைக்காரர்கள், பகுத்தறிவில்லாதவர்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்றவர்கள் போல காட்டுகிறது.
“இது அவமதிப்பதாகும். அவர்கள் உண்மையான கூறுகளின் அடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர்கள், ஒட்டுமொத்தமாக மற்றவர்கள் மீது முத்திரை குத்துவதல்ல.”
இது போன்ற கட்டுரைகளை வெளியிடும் அந்நாழிதழுக்கு தங்களுடைய ஆட்சேபத்தை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு மாபிமும் 35 அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உண்மை சிலநேரங்களில் கசக்கத்தான் செய்யும்.
“இது மலாய்க்கார்கள் கட்டுப்படுத்த முடியாதவர்கள், பேராசைக்காரர்கள், பகுத்தறிவில்லாதவர்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்றவர்கள் போல காட்டுகிறது”.அவர்க களை ஒத்து ொள்கிகார்கள் அவர்க களை பற்றி.
உண்மையை பற்றி இவன்களுக்கு என்ன கவலை. செய்வதெல்லாம் செய்து விட்டு பிறகு அறிவுக்கு ஒவ்வா காரணங்களை கூறி அதை நியாயப்படுத்துவதே இவன்களின் வேலை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
குறையும் குற்றமும் தங்களிடமே இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வது இஸ்லாமியர்களின் பொறுப்பே அன்றி பிறருடையது அல்ல.
தீவிர வாத செல்பாடுகளில் அதிகம் ஈடுப்படுவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரிந்தால் சரிதான்..?