பிள்ளையானுக்கு ஆரம்பித்தது “ஏழரை சனி” ஆரம்பம்: வீட்டை அடித்து நொருக்கினார்கள் !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பழிவாங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் தினமன்று முதல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் இனியபாரதியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டதுடன் , அவரை கடுமையாக சிலர் அச்சுறுத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார்.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தம்மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் கிழக்கின் பல காவல் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இவ்வாறு பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட்டால் அவர்கள் கற்கனை மட்டும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவார்கள் என நம்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலத்திற்கு அனைத்து முக்கிய உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: