கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 20ம் திகதி கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கவுள்ளன.
இதன் போது 11 உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பே அங்கு முதலமைச்சர் பதவியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தும், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணையாது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-http://www.pathivu.com