நம்பி வாக்களித்தது தமிழினம்! நம்ப நடக்கவேண்டியது அரசின் கடமை! வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!

ranil_maiththiriநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் என்றும் இல்லாத வகையில் ஆண்ட மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற முழு நாட்டிலும் உள்ள தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாக்களித்து அவரை தோல்வியடைய செய்துவிட்டார்கள்.

இது ஒவ்வொரு தமிழ் மக்களின் மனக்குமுறலின் வெறுப்பின் வெளிப்பாடாகும். அது மாத்திரம் இல்லாது யுத்தத்தில் போது மரணத்தை தழுவிய லட்சக்கணக்கான ஆத்மாக்களின் சாபமும் அவருக்கு எதிரான செயல்பட்டது எனலாம்.

மகிந்த ராஜபக்ச குடும்பம், அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்ட அனைத்து அடியாட்களும் அனுபவித்த சுகபோகங்களை கனவில் கூட யாரும் அனுவிக்க முடியாது எனலாம்.

ஆம் மகிந்தவிற்கு ஆதரவாக செயல்பட்ட அத்தனை கட்சிகளின் தலைமைகள், உறவுகள் ,அடியாட்கள்,அதிகாரிகள் செய்த அநியாயங்கள் எழுத்தில் எழுத முடியாது.

அவர்கள் சட்டத்தை மீறி செய்த ஊழல், மோசடிகள்,துஸ்பிரயோகங்கள் அப்பப்பா இப்படியும் ஆட்சியாளர்கள் நடப்பார்களா என்ற கேள்வி சாதாரண பொது மகன் கேட்க முடியாது மனதுக்குள் நினைத்து வேதனையடைந்தார்கள் என்பது உண்மை.

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி தீய வழியில் சம்பாதித்தவர்கள் அதற்கு உதவிய அதிகாரிகள் அனைவரும் அதே வழியில் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அத்தோடு இவர்கள் விடவில்லை அரசியல் பழிவாங்கல்கள், அப்பாவிகள் மீது பொய்வழக்கு தாக்கல் செய்வது உண்மையான குற்றவாளிகளுக்கு உதவி செய்வது அவர்கள் மூலம் பணம் பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு அநியாயங்களை செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் பல அப்பாவிகள் சிறையிலும் தேவையற்ற பொய் வழக்குகளிலும் தங்களின் சேமிப்புக்களை செலவு செய்து மன வேதனையில் துடித்தார்கள். அதற்குரிய அத்தனை தண்டனையும் தலைமை வகித்த மகிந்தவிற்கே சென்றது.

அதே போல் வடக்கு – கிழக்கு ,மேற்கு மலையகம் என்று தமிழினம் வாழ்ந்த பகுதிகளில் உள்ள அத்தனை பேரும் கடந்த அரசின் மீது விரக்தியுடனேயே வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தார்கள் என்பது உண்மை.

வட கிழக்கை போன்றே மலையகத்திலும் மகிந்தவிற்கு ஆதரவு அளித்த அரசியல்வாதிகள் அவர்களின் எடுபிடிகள் தங்கள் குடும்ப, உறவு செழிப்பிற்காக செய்த துரோக செயல்கள் அதை பொது கூட்டங்களில் சேவையாக சொல்லும் காரணங்கள், அதன் மூலம் பெறும் சொத்துக்கள் என்று சதத்திற்காக அலைந்தவர்கள் லட்சக்கணக்கில் சொத்து சேர்ப்பதையெல்லாம் பொறுத்துக்கொண்டே மக்கள் இருப்பார்கள் என்ற தப்பு கணக்கு அவர்களை தடுமாறச் செய்துவிட்டது.

மகிந்தவை மகிழ்விக்க நடாத்திய கூட்டங்கள் அங்கு அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டங்கள் அவர்களுக்காக கொடுக்கப்பட்ட உணவு, மது போன்றவைகள் எல்லாம் இந்த நாட்டின் பொது மக்களின் சொத்துக்களே.

மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரை இனவாத பேச்சுக்கள் திட்டமிட்டு செயல்படுத்திய அடிப்படைவாத பௌத்த அமைப்புக்கள் எல்லாமே அவருக்கு மிகவும் சிறப்பாகவே செயல்பட்டது அதில் எந்தக்குறையும் கிடையாது.

அதே போல் இன்று நாட்டு மக்கள் ஜனாதிபதியை மாத்திரம் தெரிவு செய்யவில்லை, இன்று புதிய அமைச்சராக இருக்கும் அத்தனை பேரும் நன்றி சொல்ல வேண்டியது இந்த தமிழினத்திற்கே, கடந்த காலங்கள் போல் வாக்களிப்பில் 50 வீதத்திற்கும் குறைவாக வாக்களித்திருந்தாலும் மகிந்தவே மீண்டும் ஜனாதிபதி. அவரின் அமைச்சர்களே இன்றும் அமைச்சர்களாக இருந்திருப்பார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களை வாக்களிக்க தூண்டியது மனச்சாட்சியாக அல்லது நமது மண்ணோடு மண்ணாகிய உறவுகளா என்பது இங்கு சிந்திக்க வேண்டியதொன்றாகும்.

ஆம் இலங்கையில் குறிப்பாக தமிழ் பிரதேங்களிலும் மலையகத்திலும் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியும் செலுத்தப்பட்ட வாக்கு வீதத்தில் அதிகரிப்பும் மக்களின் உண்மை நிலையிலே மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இன்று ’புதிய அமைச்சர்களின் வருகைக்கும் முக்கிய காரணமாகும்.

ஆகவே நமது மக்களின் வாக்குகள் ஜனாதிபதியை தெரிவு செய்வது போல் புதிய அமைச்சர்களையும் தெரிவு செய்ய மாபெரும் சக்தியாக செயல்பட்டது.

ஆகவே நாங்கள் புதிய ஜனாதிபதி அதேபோல் பிரதமரை கோருவது

• எங்களின் காணமல்போன உறவுகளை கண்டுபிடித்து தாருங்கள்

• எமது காணிகளை,சொத்துக்களை எமக்கு மீண்டும் கையளியுங்கள்.

• இலங்கையில் சமத்துவத்துடன் வாழ உரிமையை தாருங்கள்.

• எமது அப்பாவி இளைஞர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள்

• பொய் வழக்குகளை போட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்.

• பெருந்தோட்ட மக்களுக்கு சுதந்திரமாக வாழ வழி செய்யுங்கள்,அவர்களுக்கு வீட்டுரிமை,தொழில் உரிமையை வழங்குங்கள் .

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களே! உங்களை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். எங்களின் வாக்கு பலத்தால் பதவிக்கு வந்த நீங்களும் உங்கள் அமைச்சர்களும் 100 நாள் திட்டத்தில் எமக்கு வழங்க வேண்டியதை வழங்கி உதவுங்கள்.

நாட்டில் தேசிய அரசாங்கம் என்ற பெயரை உறுதிப்படுத்துங்கள்,

சில காலங்களாவது கடந்த காலத்தில் இருந்த அரசுக்கு ஆதரவு கொடுத்த தமிழ் தலைவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்காதீர்கள்.

அவர்களின் கொட்டம் அடங்கும் வரையும் பொது மகனின் மனவேதனை புரியும் வகையிலும் அவர்கள் முறைகேடான உழைப்புக்களை அரசுடைமையாக்குங்கள்.

அவர்கள் பாராளுமன்றத்தில் உங்களுக்கு ஆதரவு கொடுத்தாலும் கவனமாக வைத்து அவர்கள் செய்த பிழையான நடவடிக்கைகளுக்கு சட்ட ரீதியான தண்டனையை கொடுங்கள்.

அதேபோல் எமது புதிய அமைச்சர்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து எமது தமிழ் பகுதிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துங்கள்.

முன்னைய யுத்த காலத்தில் அரசு அழித்த வீடுகளை அரச செலவில் கட்டிக் கொடுங்கள்.

நாம் குறிப்பிட்டுள்ள பொதுவான பிரச்சினைகளில் 100 நாட்களில் தீர்க்கக் கூடியவைகளை் இருக்கின்றன. இவைகளை செய்யலாம் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி 100 நாட்களில் செய்வதை.

த.தே.கூ கவனமாக அவதானமாக செயல்பட்டு நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் ”ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலை வரலாம்.

எதிர்காலத்தில் இலங்கையை ஆட்சி செய்ய போவது சுதந்திரக்கட்சியா அல்லது ஐ.தே.க வா என்ற கேள்வி வரலாம்.

ஆகவே ரணில்’,சந்திரிக்கா, ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளித்த அத்தனை சிறுபான்மை தலைமைகளும் மக்களுக்கு பதில் கூற வேண்டிய நிலை வரும். எனினும் இல்லையேல் பாதிப்புக்குள்ளாக போவது சாதாரண பொது மக்களே!

இதில் தலைமைகள் தப்பித்துக் கொள்வார்கள், எனவே நம்பி வாக்களித்த எமக்கு நம்ப நடக்க வேண்டியது அரச தலைவர்களும், தமிழ் தலைமைகளுமே ஏன் நாம் இதை கூறுகின்றோம் என்றால் வரும் நாட்கள் அரசுக்குள் பிரச்சினைகள் எற்படக்கூடிய சமிக்ஞை காணப்படுகின்றது.

அதனால் வாக்களித்த எமது இனம் பாதிக்க கூடியது என்பதால் இப்பொழுது மகிந்த நகர்த்தும் அரசியல் நகர்வுகள் சில வேளை தமிழ் மக்களுக்கு எதிராகலாம், காரணம் தமிழ் மக்கள் வாக்கு அவருக்கு கிடைக்காமல் போனதால் கடும் கோபம் மகிந்தவிற்கு இருக்கின்றது சூடுபட்டவர் சும்மா இருக்கமாட்டார்.

அதனால் நமது இனம் பழிவாங்கப்படலாம் எனவே ராஜபக்ச அரசியலில் வெற்றி பெறும் நிலையாக கட்சி தலைமை பொறுப்பு மாற்றும் இருக்கலாம். ஏனைய நமது சிறுபான்மை அரசியல் தலைமைகள் வரும் 100 நாட்களை முடியுமானவரை பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வேலைத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு பயனை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதற்கு முழு அமைச்சும் உதவவேண்டும் உங்களை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வு மலரவேண்டும். இது 100 நாட்திட்டமாக சிறுபான்மை அமைச்சர்கள் செயற்படுத்தவேண்டும்.

நாங்கள் நம்பி அளித்த வாக்குகள் மூலம் ஜனாதிபதி அமைச்சரவை,அமைச்சர்கள் நியமனம் பெற்றதை ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துக்கூறி அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று எமது இனத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவுங்கள்.

சிறுபான்மை தமிழ் மக்கள் நம்ப நடக்கவேண்டும் அணைவரும்

-மகா

-http://www.tamilwin.com

TAGS: