இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக்கட்டுப்பாடு அவசியம் இல்லை என்று எண்ணியே இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஆயுதங்கள், இராணுவ சீருடைகள், வெடி பொருட்களை தவிர, வடக்கு கிழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கான விநியோகத் தடையையும் பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.
-http://www.tamilwin.com