ஜனாதிபதி மைத்திரிபால குறித்து கூட்டமைப்பு அதிருப்தியில்

sampanthan_sumanthiran_mavaiசிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிகளை மீறிய செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை வெளியேற்றுதல், காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மைத்திரிபால சிறிசேன உறுதி மொழிகளை வழங்கி இருந்தார்.

எனினும் தற்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக தனிதனிக் குழுக்களை நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கடந்த  மகிந்த அரசாங்கமும் இவ்வாறு ஆய்யுவுக்குழுக்களை நியமித்ததே தவிர, தீர்வுகள் வழங்கப்படவில்லை.

இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: