சீனாவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த மஹிந்த எத்தனித்தார்: ரணில் குற்றச்சாட்டு

ranil_mahinda_met_001மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட சீன சார்புக் கொள்கை மாற்றியமைக்கப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதவியேற்றப் பின்னர் முதலாவது தொலைக்காட்சி செவ்வியை என்டிடிவிக்கு வழங்கியேோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு எதிராக சீனாவையும் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் வைத்து விளையாட எத்தனித்தார்.

எனினும் அதுவே அவருக்கு தடையாக வந்து விட்டது என்று குறிப்பிட்டார். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சீனா, இலங்கையில் 6 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

 

இதில் இந்தியாவுக்கு தொல்லை தரக்கூடிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களும் உள்ளடங்குகின்றன. இந்தநிலையில் அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களும் உள்ளூரில் உள்ளவர்களுடன் செய்து கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

 

இதன்போது சீனர்களே அல்லது வேறு நாட்டினரோ ஊழல்களில் ஈடுபட்டிருப்பார்களாயின், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர்கள் செலவிலான போட் சிட்டி கொம்ப்லெக்ஸ் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. காரணம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் சுற்றாடலை பாதிக்கக்கூடிய எந்தவொரு ஆய்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் எவ்வித பயன்களும் ஏற்படவில்லை என்று ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை சீனாவின் உதவியில் தங்கியிருக்கும் இலங்கையில் சீனாவினால் 7 பில்லியன் டொலர்கள் வரை கடன்கள் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

-http://www.tamilwin.com
TAGS: