தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
100 நாள் வேலைத்திட்டம்,
உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள்,
கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள்,
மனித உரிமை மீறல்கள்,
ஜனாதிபதி தேர்தலின் போது பெற்ற முறைகேடுகள்,
கொழும்பு முறைகேடுகள்,
கொழும்பு மாநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள்,
தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள்
உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும்.
இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இரா.சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகிய பதினொரு பேர் பணியாற்றுவர்.
-http://www.tamilwin.com