முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பரம்பரையும் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினறும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல மஹிந்த ராஜபக்ச என்ற திருட்டு கும்பல் இன்று அகப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க கொண்டு வந்த கோடிக்கணக்கான ரூபாய் பெருமதியான அன்பளிப்பு பொருட்கள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் கைப்பற்றப்படுகின்றன.
சொகுசு கார்கள் விமானங்கள் கைப்பற்றப்படுகின்றன இவை அனைத்தும் மக்களிடம் மஹிந்த குடும்பம் கொள்ளையடித்த பணம்.
மஹிந்த தமது தேவைகளுக்காக ஆயிரத்து எண்ணூறு வாகனங்களை பாவித்துள்ளார்.
நூற்று இருபது கோடி மக்கள் வாழும் சீன ஜனாதிபதி கூட இவ்வளவு வாகனங்களை பாவித்திருக்கமாட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா கடந்த ஒன்பதாம் திகதி எழுநூறு கோடி ரூபாய் பணத்தை இலங்கை வாங்கி தபரபேன் கிளையில் இருந்து மீள எடுத்துள்ளார்.
மக்கள் பணத்தை தமது வீட்டு பணத்தை போல இவர்கள் கையாண்டுள்ளனர்.
இது தவிர அலரிமாளிகையில் கோடிக்கணக்கான பணத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.
அதில் 10,20,50,100 நோட்டுகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அலரிமாளிகையில் விட்டு செல்லப்பட்டுள்ள பணம் தொடர்பாக இன்று பலத்த சந்தேகங்கள் கிளம்பியுள்ளன .
இது தவிர ஜனாதிபதியின் புதல்வர்கள் பல பெண்களை சீரழித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன
சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் இதில் அடங்குவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மஹிந்த குடும்பம் மக்களிடம் கொள்ளையடித்த பணம் தொடர்பாக சரியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்
இது தொடர்பாக நாம் எமது கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.
ராஜபக்ச கும்பலுக்கு சட்டத்தின் மூலம் நாம் கொடுக்கும் தண்டனை இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com
இவங்களுக்கு மரண தண்டனை கூடாது பத்து கை விரல்களையும் வெட்டி உயிரோடு விட வேண்டும் .
ஒட்டு மொத்த குடும்பமும் பெட்டியக் கட்டிட்டு ஓடிட்டானுங்கப் போல.
அரசியல்வாதிகள் எந்தக் காலத்திலும் பாடம் படிக்கமாட்டார்கள்.நான்று கொண்டும் சாக மாட்டார்கள். அவர்களின் குடும்பத்திற்குச் சாபத்தை விட்டுச் செல்வார்கள்! அது தான் அவர்கள் விதி!