போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அமரிக்க பிரஜை என்ற அடிப்படையில் அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவுள்ளார்.
இத் தகவலை அமெரிக்காவின் சட்ட பேராசிரியர் ராயன் குட்மட்ன் நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் இன்று வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் 1996ஆம் ஆண்டின் போர்க்குற்ற சட்டத்துக்கு கோத்தபாய ஆளாகிறார். இந்தநிலையில் அமெரிக்க பிரஜை ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அமெரிக்க நீதிமன்றத்துக்கு பதில் சொல்லவேண்டியுள்ளவராவார்.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜை என்பதுடன் அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். அத்துடன் லோயாலா சட்டக்கல்லூரியில் கணணி பிரிவு இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் போர்க்குற்றச்சாட்டை அமெரிக்காவினால் சுமத்தமுடியும் என்றும் குட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசாரணைகளால் குற்றத்தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கமுடியாது. அத்துடன் நிதித்தடைகளையும் அந்த சபையால் விதிக்கமுடியாது என்றும் குட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது குடும்பமும் நண்பர்களும் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்!- நாமல் ராஜபக்ச
தமது குடும்பத்தினர் பாதுகாப்பு படையினரால் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலிஸார் பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் தமது நண்பர்களின் வீடுகளையும் சோதனையிடுகின்றனர்.
எனினும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்பம் தேவையற்ற வகையில் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“கார்ல்டன் ஹவுஸ்” சோதனையிடப்பட்ட போது அங்கு சீ பிளேன் இருப்பதாகவும் லம்போகினி காரின் டயர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் அங்கிருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேவேளை தமது வீடு சோதனையிடப்பட்ட போது அது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com