மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது கடினம்!- ருத்திரகுமாரன்

rudrakumar-001இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி ருத்திரகுமாரன் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தினர்.

இதற்காக மைத்திரிபாலவின்,  ஆட்சியில் தமிழ் மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்பமுடியாது.

மைத்திரிபாலவும் வன்னியின் இறுதிப் போரின் போது பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையி;ல் அவரால் இறுதிப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியாது என்று ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: