2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் முடிவில் சில விமர்சனங்கள் உண்டு, எமது முடிவிற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய முடிவை தென்னிலங்கை நன்கு உணர்ந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் சுவிட்சர்லாந்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஒவ்வெரு கால கட்டங்களிலும் பலம் பெற்றது. நாம் எதையும் இழந்து விடவில்லை. எமது பயணத்திற்கு அன்றும், இன்றும் சுவிட்சர்லாந்து பலமானது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் இடம் பெற்ற செந்தமிழ்ச் சோலை அமைப்பின் முத்தமிழ் விழாவில் பங்குபற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
-http://www.tamilwin.com



































