போர்க்குற்றங்களை விசாரணை செய்ய இலங்கையில் புதிய சுயாதீன ஆணைக்குழு

sri lanka war crimeஇலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு, முழுமையாக நிபுணர்களை கொண்டு நடத்தப்படும். அத்துடன் இந்தக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தும் என்றும் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாரிய அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தார்.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவும் அவர் இணக்கம் வெளியிடவில்லை.

-http://www.tamilwin.com

TAGS: