இலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக்கூடாது. எனவே, மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பி வாருங்கள் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“சகல இன மக்களினதும் வாக்குகளுடன் உண்மையான அரசு இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் உலகின் எந்தவொரு பகுதியிலும் இலங்கையர்கள் அகதிகளாக இருக்கக்கூடாது.
தயவுசெய்து தாய் நாட்டுக்கு வாருங்கள். உங்கள் அனைவரையும் வரவேற்பதற்காக திறந்த மனதுடன் நாம் நேசக்கரம் நீட்டுகின்றோம்” – என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
-http://www.tamilcnnlk.com
உலகத தமிழர் பாதுகாப்பு மலேசிய மையத்தின் புரவலர் திரு சாமுவேல் ராஜ் மற்றும் இயக்குனர் பொன். ரங்கன் இருவரும் இலங்கையில் புதிய சனாதிபதி மற்றும் பிரதமர் புதிய தேர்வும் வெற்றியும் ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை காத்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அரைகுவல் விடுக்கின்றனர்.
இலங்கையின் வட மாநில தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ்ழீழ தமிழர்கள் தமிழா தேசிய கூட்டமைப்புக்கு முழு ஆதரவு தந்து மாநில முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழனின மூத்த அரசியல் வாதி சம்பந்தன் போன்றோரின் ஆதரவில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் சத்தியப் பிரமாணம் செய்துககொண்டுள்ளனர். இது வட மாநில மற்றும் இலங்கைத்தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு
வழி வகுத்துள்ளது என்பதில் மலேசியத் தமிழர்களும் மன நிம்மதி பெறுகின்றோம்.
இனி தமிழர் நாடு தமிழர் தேசியமும் இதர தமிழர் சார்பு கட்சிகளும் இலங்கை வட மாநில தமிழர் தேசியம் எடுக்கும் முடிவுகளுக்கு குழப்பம் தராமல் இலங்கை தமிழர்களின் அரசியல், புது வாழ்வியல் சமூக வளப்பத்துக்கு வாய்ப்பு வழங்கும் விதத்தில்
தங்கள் அரசு நகர்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுகிறோம்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும் இது அவர்கள் நடத்திய மனித உரிமை இனப்போர் நடத்திய அவலத்துக்கு கிடைத்த விமோசனம்.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத தமிழர்கள் புதிய சுதந்திர காற்றை சுவாசித்தாலும் தமிழீழம் அமைவது காலத்தின் காட்டாயம் என்பதை புதிய சநாதிபதிக்கும் பிரதமருக்கும் உலகத் தமிழர்கள் நினைவு படுத்த கடமைப பட்டுள்ளோம் என்று திரு சாமுவேல் ராஜும் பொன் .ரங்கனும் தமது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழீழ வட மாநில அரசியல் நிமதிக்கும் மாற்றத்திற்கும் வித்திட்ட இவ்வெற்றியை பாராட்டி மகிழும் பொருட்டு 16 / 1/ 2015 மாலை 5 மணிக்கு கோலா லம்பூரில் நடை பெறும் சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் நாடு முழுவதுமுள்ள தமிழின இயக்கப பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்டுகின்றனர்/
தொடர்புக்கு பொன் ரங்கன் 016 6944223 என்ற எண் வழி பதிவு செய்துக் கொள்ளும் படி அன்புடன் விழைகிறோம்.
தேதி மாற்றம் கவனிக்கவும் நாளை 25/1/2015 மதியம் 1 மணிக்கு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உலகத தமிழர் பாதுகாப்பு மலேசிய மையத்தின் புரவலர் திரு சாமுவேல் ராஜ் தலைமையில் தமிழக தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் திரு அரிமாவளவனுடன் மேற்காணும் சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வு 25/1/2015 ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு டான் சிறி சோமா மண்டபத்தில் நடைபெறும்.
சும்மா விளங்காமல் எதையும் செய்யவேண்டாம் …..இனபிரச்சினை தீர்வுக்காக அன்று உள்நாட்டில் செயபட்ட பண்டா -செல்வா ஒப்பந்தம் …..டுட்லி -செல்வா ஒப்பந்தம் இவைகளை கிழித்து எறிந்தவர்கள் சிங்கள அரசியல் வாதிகள் …ஜெயவர்தன -ராஜீவ் சர்வதேச ஒப்பந்தம் குப்பை கூடைக்குள் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன …புதிதாக இருபது புதிய போத்தலில் பழைய கள்ளு……அங்கு தமிழர்கள் ராஜபக்ச வுக்கு எதிராக வாக்கு போட்டது மீண்டும் வரவிடாமல் செய்யவே ….மற்றபடி எதையும் எதிர்பார்த்து அல்ல ..