இலங்கை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்று இலங்கையின் பிரதமர் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத்தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அதில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
இலங்கையும் இந்தியாவுடன் வரலாற்று உறவுகளை புதுப்பித்து இணைந்து செல்ல தயாராகவுள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கையின் வர்த்தகர்கள் இந்தியாவுடன் வர்த்தகத்தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வழமையாக அமைச்சர்களே இந்திய குடியரசுத்தின நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்குபற்றுவர்.
எனினும் நேற்று இந்த நிகழ்வில் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்று ராஜதந்திர முறைமையை மாற்றியுள்ளதாக இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உட்பட்டோரும் பங்கேற்றனர்.
-http://www.tamilwin.com