வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரத்தியேக சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் – சம்பந்தன்

sanpanthan_5வடக்கு – கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகளைத் தீர்ப்பதற்கு நிறைவேற்று அதிகார சபைக்கு விடுத்து பிரத்தியேக சிறப்புக் குழு­வொன்­றினை அமைக்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரசபை ஒன்றுகூடியபோது, அவ் ஒன்றுகூடலுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவுடன் சந்தித்து பேச்சுக்களை நடத்தியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும் இவ்விடயம் குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­காவுடன் அடுத்த வாரம் பேச்ச நடத்தும் போது வலியுறுத்தப்படும் என சம்பந்தன் கூறியுள்ளார்.

நேற்றை சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கையில்:-

01. வடக்கு – கிழக்கில் உயர் பாது­காப்பு வல­யங்­களில் உள்ள தமிழ் மக்­களின் காணி­களை உட­ன­டி­யாக அவர்களிடம் கைய­ளிக்க வேண்டும்.

02. பொதுமக்­களின் காணி­களில் உள்ள இரா­ணுவ
முகாம்கள் அகற்­றப்­ப­டு­வது தொடர்பில் அர­சாங்கம் அக்­க­றை­கொள்ள வேண்டும்.

03. மீள்­கு­டி­யேற்றச் செயற்­பா­டுகள் இன்­னமும் தாம­த­டை­கின்­றன. வலி­காமம், சம்பூர் பகு­தி­ களில் மக்கள் மீள் குடி­யேற்­றப்­பட வேண்டும்.

04. யுத்­தத்­தின்­போது வெளி­யேற்­றப்­பட்ட மக்­களை யுத்தம் முடி­வ­டைந்­த­வு­டனும் மீள் குடி­யேற்­றாது வைத்­தி­ருப்­பது மோச­மான செயற்­பா­டாகும். எனவே மீள் குடி­யேற்றம் தொடர்பில் உட­னடி வேலைத் திட்­டங்கள் அவ­சியம்.

05. வலி­காமம் சுன்­னாகம் பகு­தியில் தற்­போது எண்ணெய் கசிவு ஏற்­பட்டுள்ளதால் 700க்கும் அதிகமான குடிநீர்க் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்­சி­னைக்கு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

06. தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்கம் அதிக அக்­கறை எடுக்க வேண்டும்.

07. வடக்கு – கிழக்கு மக்­களின் பிர­தான பிரச்­சி­னைகள், மாண­வர்­களின் கல்விப் பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக தீர்வு காண்­பது அவ­சி­ய­ம்.

போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக சம்பந்தன் அவர்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: