முதலில் வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.அதற்கேதுவாக படையினரது எண்ணிக்கை நாட்டின் அனைத்து பகுதிகளிற்கும் பரவலாக்கப்படவேண்டுமென யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்கூறியுள்ளார்.
சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களிடையே விபரித்த அவர் புதிய அரசின் செயற்பாடுகள் பல இடத்தில் நன்மை பயக்கின்றது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயளாளர் ஆகியவர்களின் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பாரிய பிரச்சினையான இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக்கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதுமட்டுமின்றி பொதுமக்களின் காணிகளையா? இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
அது தொடர்பான அவருக்கு முழுமையாக எடுத்துக் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியோற்றங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்ப்பாக விரிவாக எடுத்துக் காட்டப்பட்டது
இது பாரிய மாற்றதை ஏற்படுத்துமா? என்பது அவர்களது அடுத்த வினாவாக இருந்தது. 99 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் வடமாகாணத்தல் உள்ளனர். விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு சிங்கள பிரதிநியை அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்தை அவர்களுக்கு தெரிவித்தேன்.
இதன் பின்னரே இதில் இவ்வளவு சிக்கலான பிரச்சினை உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்’ என்று அவர் கூறினார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
-http://www.pathivu.com