போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு கோரும் அமெரிக்க அதிகாரி

war_crim_ameri_001இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் தெரேசா ஷேபர், அமெரிக்கா அரசாங்கம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் ஹூசைனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் உதவியுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்கா இதுவரை கையாண்ட கடும் போக்கை கைவிட்டு நெகிழ்வான போக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரேசா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெரேசா, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் பணியாற்றிய பலமிக்க முன்னாள் அதிகாரியாவார்.

-http://www.tamilwin.com

TAGS: