ஐரோப்பாவில் அதிகரித்துள்ள மதவெறி: தமிழர்களும் பாதிப்பிற்குள்ளாகலாம்!

europ_001பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள்.

மதவெறி ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களிற்கு பிடிக்காத பொருட்களைக் காட்சிப்படுத்தி ஊர்வலம் சென்றார்கள். ஆனால் இந்த இதற்கு எதிரான முஸ்லிம்களும் எங்களில் ஒரு இனமே என்ற ஊர்வலங்களை மக்கள் நடத்தி தமது இன, மத ஐக்கியத்தைக் காட்டினர்.

பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தோனேசியா, மியன்மார் போன்ற நாடுகளின் இஸ்லாமியர்கள் எங்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள்.

எனவே தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் கூட சில வேளைகளில் பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.

மேலும் யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

-http://www.tamilwin.com

TAGS: