வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளனர்: விக்ரமபாகு கருணாரட்ன

vikramapakuவடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளனர். சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்பட போவதில்லை.

வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனினும் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு எவரும் கோரவில்லை.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் படையினருக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

இது மாதாந்தம் கையொப்பமிடும் வழமையான ஓர் வர்த்தமானி அறிவித்தலாகும்.

நிறைவேற்றுப் பேரவையின் அங்கத்துவர் என்ற ரீதியில் இந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு அமைச்சரிடம் கோருவேன்.

ஓய்வூதியத் தொகை 1000 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட உள்ளது. இது போதுமானதல்ல. இதனை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன்.

தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துமாறு அரசாங்கம் செய்துள்ள பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே.

வாழ்க்கைச் செலவு அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமென விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: