விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி விவகாரத்தில் மசீச கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுவதை அதன் தலைவர் லியோ தியோங் லாய் மறுத்தார்.
முகநூலில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்குப் பொறுப்பேற்க சப்ரி தொடர்ந்து மறுப்பாரானால் அவ்விவகாரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் எழுப்பப்போவதாக லியோ உறுதி கூறினார்.
இஸ்மாயில் சப்ரியைக் கண்டிப்பதில் மசீச கடுமை காட்டியிருக்க வேண்டும் என முன்னாள் கட்சித் தலைவர் சுவா சொய் லெக் குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக லியோ இவ்வாறு கூறினார்.
ரெஸ்டாரன் குஎதியோ 7.50 ரோடு ஓரம் 6.50 5 ஸ்டார் ஹோட்டெல 25.00 பெட்டாலிங் ஸ்ட்ரீட்ல 15.00 / ஒரு ஊடான் தான் போடரனுங்க .இத கேட்ட தப்பா?
ஙொப்பன் தன்னானே…இந்த கொய்த்தியோவை தின்னுப்புடுட்டுத்தான் இந்தப் பய புள்ளைக விலை குறைக்க மாட்டறாய்ங்கன்னு புலம்பினாரோ மந்திரி… நல்லா கத வுடுறாய்ங்கப்பா…ம் இன்னும் எம்புட்டு நாளைக்குன்னு பாப்போமே
இப்பதான் தூங்கி என்திரிச்ச்ருக்காறு?
முன்பெல்லாம் அச்சம் என்பதே அறியாத சாதனை தலைவன் இது மாதிரி தான் அறிக்கை உடுவார் நான் சட்ட சபையில் பேச உள்ளேன் , வருகின்ற பொது தேர்தலுக்குள் பிரதமரை சந்தித்து இதை பற்றி கலந்து ஆலோசிக்க உள்ளேன்,, தேசிய பொது கூட்டத்தில் இதை விவாதிக்க உள்ளேன் பாராளும் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செள்ள உள்ளேன் இதை நான் சும்மா விட மாட்டேன் என்று கர்ஜித்து ஹி ஹி ஹீ அவ்வளவு தான்,,,,,,, அதயே பின் பற்றி இந்த சீன பயல் இன்று கீ க்கீ கீ
இஸ்மாயில் சொன்னது sariyee.
இவரு எப்பவும் இப்படிதான்….. தலைய உட்டுட்டு வால பிடிப்பாரு ……..
‘அவ்விவகாரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் எழுப்பப்போவதாக’ – எழுப்பி எந்த ஆணியைப் புடுங்க…அதான் சொல்லிட்டாங்களே எந்த ஆணியும் புடுங்க முடியாதுன்னு…அவ்வளவு உறுதியான ஆணியா? இல்லை…ஆனா எல்லாம் துருப்புடுச்சி மக்கிப் போன ஆணிகள்.
சாமிவேலு அறிக்கையின் மறுஉருவம் உங்கள் அறிக்கை. தொடரட்டும் பாரிசான் நாமம்.பென்தொங் நாடாளுமன்ற தொகுதியில் மின் துண்டித்து வெற்றி பெற்றவர் தானே நீங்கள்.