முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். மலாய்க்கார்கள் சீனர்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறியதை பொதுமக்கள் நுட்பமாக ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“குற்றம்குறை சொல்வதற்குமுன் அவர் சொன்னதைச் சரியாக மதிப்பிட வேண்டும். செய்தித்தாள்களில் படிப்பது மட்டும் போதாது”, என்றார்.
இஸ்மாயில் எந்தவொரு இனத்தவரையும் குறிவைத்து அவ்வாறு கூறவில்லை என பிரதமர்துறை விளக்கமளித்துள்ளது பற்றி கருத்துரைக்கையில் மகாதிர் இவ்வாறு கூறினார்.
இதற்குமுன்னர், அவர் அதை அறிவிலித்தனமான கருத்து என்று கூறியிருந்தார்.
இவர் சொன்ன எதாவது இருக்கும் …எதுக்கும் ஆரஞ்சி பாருங்க ……
கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்னகி வாழ்விலும் களங்கம் உண்டு
(உன்னைப் போல) காப்பாற்ற ஒருவன் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு.
சீனர்களுடன் இணைந்து இந்தியர்கள் கைகோர்க்க வேண்டிய நேரம் இது. பாரிசானில் இருக்க வேன்டியது இரண்டே கட்சிகள்: 1. மலாய்க்காரர் 2. மலாய்க்காரர் அல்லாதார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
யார் பிரதமர் ???? நஜிப்பா??? மகாதிரா???? குழப்பமாய் இருக்குது நம்ம நாட்டில!!!!!!?????
உலக மஹா இனவெறி யோக்கியன் பேசறான் .
உங்களுக்கு முன்பே மக்கள் தெளிவான கருத்தை புரிந்துகொண்டுள்ளனர்…. தெளிவாகச் சொன்னால், இஸ்மாயில் குறிப்பிட்ட சீன வியாபாரிகளையே குறிப்பிட்டு பேசினார் என்பதே உண்மை…!!!
பக்கத்தில் இருக்கும் யானையைப் பார்க்க பூதக் கண்ணாடி வேண்டுமோ?.
மலேசியாவில் ஒரு நாளைக்கு சராசரி 50 பேருக்கு
இருதய அறுவை சிகிச்சைகள் (பல வித மாற்று) சிகிச்சைகள்
நடக்கிறது…50 வயதுக்கு மேல் அனைவரும் angiogram எனும் இருதய
அடைப்பு உள்ளதா என்று சோதித்தால் பலரை காப்பாத்தி விடலாம். ஆனால் மருத்துவ மனை மருத்துவர்கள் தள்ளி போடுவதில் ஆர்வம்
காட்டுகின்றனர் ..பெரும்பாலான இறப்புகள் தள்ளிப்போடும் “தரம்தான்” இதற்கு நோயாளிகள் தங்கள் இருதய நோயின் தன்மையை சரியாக சொல்லாததும் ஒன்று. மருத்துவர்கள் யூகிப்பில் மருந்துகளை தந்து மரணங்களை தெரிந்தே தள்ளிப்போடும் விந்தையும் உண்டு. ஆனால் ..மரணம் …………அது யார் பேச்சையும்
கேர்ப்பதில்லை. கத்திக்கு மட்டும் அது ஓகே ! இந்த மகாதீரும் அதைத்தான் சொல்வார். “சீக்கிரம்” புவாட் சிப்பாட்! இதையும் துல்லியாமாக கவனிக்கா சொல்லுங்க டாக்டர் சார்!