ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு

sambanthanஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் புதிய அரசு இந்த விஷயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து , விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்கக் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விஷயங்களை விசாரணைக் குழுவின் முன்னர் வைக்கவும் வழிவகுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த காலகட்டத்தில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலுடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: