13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித

raajithaஇந்திய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தவில்லை என  ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தகைய எந்தவொரு கோரிக்கையையும் இந்தியா விடுக்கவில்லை. இனப் பிரச்சினைக்கு, அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை எட்டுவது தொடர்பாக,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அரசாங்கத்திடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அணுகுமுறைகள் தான் தோல்விக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: