திருமலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு என்ன நடந்தது? சுரேஷ் கேள்வி

Suresh-Premachandran_1திருகோணமலை கடற்படை முகாமில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தடுத்து வைக்கப்ப ட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.பதிவு இணைய செய்தி

குறித்த முகாமில் 35 குடும்பங்கள் வெளிஉலகத்துடன் எந்தவிதமான தொடர்பும் இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் விடுவிக்கப்பட் டுள்ளனர். அதேபோல இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு என்ன நடந்து என்பது மர்மமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

வெளி உலகத்துடன் எதுவித தொடர்பும் இன்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந் தமையானது மிகவும் மோசமான விடயம் எனச் சுட்டிக்காட்டிய அவர் இது கோட்டாபயவின் முகாம் என அறியப்பட்டிருந்ததாகவும் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.பதிவு இணைய செய்தி

நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்களும் பங்காற்றினார்கள் என்ற வகையில் இந்த முகாமில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப் பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இதுவரை நடத்திய விசாரணைகள் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை புதிய அரசாங்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. இந்த ஆணைக்குழு சுமார் 2 வருடங்களாக விசாரணைகளை நடத்தியுள்ளது. இதுவரை நடத்திய விசாரணைகள் எந்தளவில் உள்ளன என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். எனவே குறித்த ஆணைக்குழு இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஆணைக்குழு கூறியிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். திருகோணமலை முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

-http://www.pathivu.com

TAGS: