யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டமை சரியானதே – பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

uk flagசிறிலங்காவுக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணை அறிக்கை சமர்பிக்க காலம் தாமதிக்கப்பட்டமையானது, சரியான முடிவே என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தாயினாவின் சிறிலங்காவுக்கான உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தமது வலைபதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு சாட்சி மற்றும் தகவல்களை வழங்கியவர்களுக்கு இந்த தீர்மானம் கடினமானதாக இருக்கும்.

குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனினும் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறுதல் மற்றும் ஐக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பு போன்ற விடயங்களில் அர்ப்பணிப்புடன் இருக்கிறது.

எனவே சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த தாமதம் ஏற்படுத்தப்பட்டமை சரியானதே என்று அவர் கூறியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: