நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

k-shanmugamஇலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய அசராங்கத்தின் ஊடாக இலங்கையில் மீண்டும் நல்லிணக்கம் மற்றும் ஜனநயாகம் கட்டியெழுப்பப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

நம்பகத்தன்மையுடன் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் இன நல்லிணக்க முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

புதிய அரசாங்கத்துடன் தொடர்ச்சியான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய அசராங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட சிங்கப்பூர் அதிகாரி சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: