இனப்பிரச்சினைக்கும் காலக்கெடு! மைத்திரியிடம் தமிழ்தரப்புக்கள் வலியுறுத்தல்!!

தெற்கு மக்களிற்கு நூறுநாள் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது இனப்பிரச்சினைகான தீர்வு திட்டம் தொடர்பினில் கால எல்லையொன்றை வகுக்க தமிழ் தரப்புக்கள் கோரிக்கைகளினை முன்வைத்துள்ளன.  வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 10.30 அளவினில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ளாhர்.

ஜனாதிபதியின் வருகைக்கான பாதுகாப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்றைய கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரச மற்றும் எதிர்தரப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவடக்கு முதலமைச்சர்,அமைச்சர்கள் ,மாகாணசபை உறுப்பினர்கள்,அரச அதிபர்கள், உயரதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக யாழ்.மாவட்ட செயலகத்தை வந்தடைந்த மைத்திரியை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றிருந்தார்.கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி  நல்லூர் மற்றும் நாகவிகாரைக்குச் செல்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அபிவிருத்திக்குழுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-http://www.pathivu.com
TAGS: