இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது நிலைப்பாடு எனத’ தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இருந்தபோதிலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து அதனை
விசாரிக்காமால், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு என்றும் அவர் கூறினார்.
இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஒரு உள்நாட்டு விசாரணை நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
…
வழக்கு விசாரணை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது நிலைப்பாடு என்கின்ற போதிலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து அதனை விசாரிக்காமால், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு என்றும் அவர் கூறினார்.
2 லட்சத்துக்கும் அதிகமான சிப்பாய்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தில் ஒரு சிலர் குற்றங்களை புரிந்திருந்தால், அதனை விசாரித்து அவர்களை தண்டிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, அதனை மறுத்த சரத் பொன்சேகா அவர்கள், இதற்கு முன்னரும், குற்றச்சாட்டுக்கள் வந்தபோது பொது விசாரணைகள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
-http://sankathi.com