அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் முகம்மட் சைபுல் புஹாரி இரகசியமாக கொடுத்த சாட்சியங்களை வெளியில் கூறிவரும் முகம்மட் ஷாபி அப்துல்லா, சாட்சியங்களுக்குச் சுவைகூட்ட தம் கைச்சரக்கையும் சேர்த்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
பிப்ரவரி 17-இல், கிளானா ஜெயாவில், ஒரு கூட்டத்தில் பேசிய ஷாபி, “அன்வார் அவருடைய (சைபுல்) முலைக்காம்புகளைக் கிள்ளினார்”, எனக் கூறினார்.
குதப்புணர்ச்சிக்குமுன் இது நடந்ததாம்.
மலேசியாகினி நீதிமன்றக் குறிப்புகளைச் சோதனை செய்து பார்த்ததில் கிள்ளும் சம்பவம் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே, ஷாபி குதப்புணர்ச்சி வழக்கு பற்றி விளக்கக் கூட்டங்கள் நடத்துவதைப் பல தரப்பினர் குறைகூறியுள்ளனர். சட்டப் பேராசியர் குர்தியால் சிங் நிஜார், இரகசியமாக வழங்கிய சாட்சியங்களை ஷாபி வெளியில் தெரிவிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றமாகும் எனக் கூறியுள்ளார்.
மூத்த வழக்குரைஞர் ஒருவரும் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரும் அம்னோ- தொடர்புள்ள ஷாபிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர் மன்றத்தில் மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.
இன்னும் சிலரும், ஷாபி குதப்புணர்ச்சி தொடர்பில் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளையெல்லாம் கூறி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளிடம் புகார் செய்துள்ளனர்.
ஷாபியிடம் இது பற்றி வினவுவதற்கு மலேசியாகினி முயன்றது. அவரிடமிருந்து இதுவரை பதில் இல்லை.
இது ஒரு கேவலமான செயல்,இது வரையில் மலேசியாவில் நடந்த வழக்குகளில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லையே.முடிந்து போன ஒன்றை பேசியென்ன பயன் ?. இந்த வழக்கை தவிர இவனுக்கு வேற ஒன்றும் இல்லை போல,அதனால்தான் அம்னோ அரசாங்கத்திடம் நக்கி தின்ன கிளம்பிட்டான்.
இவனெல்லாம் ஒரு வழக்கரிக்ன்யன். சுத்த மட ஜென்மம். இவனை போன்ற கூறு கெட்ட ஜென்மங்கள் தான் அம்னோவை ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர்
சைபுலின் ஆசனக் குழியை அடுத்து முலைக் காம்பு விவகாரத்தில் இவனுக்கு கண். 1MDB நாட்டின் பொருளாதாரத்தை புதைக்குழிக்கு வழி காட்டுவதுபோல் இன்றைய ஒன லைன் செய்தி தெளிவாக சொல்கிறது. பிச்சை எடுக்கும் எதிகாலத்தைவிட போராடுவதே மேல்…
சட்டத துறையில் குதபபுணர்ச்சி பாடம் கட்டயாப்படுத்த்லாம். வழக்குகள் சரியாக போகும்.
பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகும் என்பது இந்த ஷாபியின் தத்துவம் போலும் ….