சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக கால அவகாசத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் ஜனாதிபதியை அவர் சந்தித்த போது இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு சிறிலங்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
ஆறு மாதங்களின் பின்னர் சிறிலங்கா மீண்டும் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் வரும்.
அப்போது இந்த பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-http://www.pathivu.com